திங்கள், ஜனவரி 18, 2021

tamilnadu

img

ஓசூரில் சிபிஎம் பிரச்சாரக் கூட்டம்

கிருஷ்ணகிரி, ஏப். 11-மதச் சார்பற்ற முற்போக்கு கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து ஓசூர் நகராட்சிக்குட்பட்ட மத்திகிரியில் மார்க்சிஸ்ட் கட்சி தேர்தல் பிரச்சார பொதுக் கூட்டம் நடைபெற்றது. ஒன்றியச் செயலாளர் பி.ஜி.மூர்த்தி தலைமை தாங்கினார். மாநிலக் குழு உறுப்பினர் தயாநிதி உரையாற்றினார்.மாவட்டச் செயலாளர் எஸ்.ஆர். ஜெயராமன், செயற்குழு உறுப்பினர்கள் சுரேஷ், ஜேம்ஸ் ஆஞ்சலா மேரி, மாவட்டக் குழு உறுப்பினர்கள் சேதுமாதவன், ரவி, சிஐடியு துணைத் தலைவர் வாசுதேவன் ஆகியோர் பேசினர்.ஓசூர் தொகுதி சட்டமன்ற இடைத் தேர்தலில் போட்டியிடும் திமுக வேட்பாளர் சத்யாவுக்கு உதயசூரியன் சின்னத்திற்கும், கிருஷ்ணகிரி மக்களவை தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் ஏ.செல்ல குமாருக்கு கை சின்னத்திலும் வாக்குகள் கோரினர்.

;