பிரதமர் நரேந்திர மோடி தேர்தல் பிரச்சாரக்கூட்டங்களில் மக்கள் மத்தியில் மதவெறியைக் கிளப்பும் விதத்தில் பேசி வரு கிறார். தமிழ்நாட்டில் இராமநாதபுரத்திலும் தேனியிலும், கர்நாடக மாநிலத்தில் பெங்களூரிலும் அவர் அப்படிப் பேசியுள்ளார்.தேனியில் அவர் உரையாற்றும்போது, சபரிமலை பிரச்சனையில் கம்யூனிஸ்ட்டுகளும், முஸ்லிம்களும் ஆபத்தான விளையாட்டை மேற்கொண்டதாகவும், மக்களின் கடவுள் நம்பிக்கை மீதே தாக்குதலைத் தொடுத்தனர் என்பது போன்றும் பேசியிருக்கிறார். மேலும் அவர், “பாஜக இருக்கும் வரையிலும் எவராலும் கடவுள் நம்பிக்கையை அழிக்க முடியாது,” என்றும் பேசியிருக்கிறார்.பிரதமர் நரேந்திர மோடி தேர்தல் நடத்தை விதிகளை மீறியிருப்பது மட்டுமல்லாமல், சபரிமலை கோவில் பிரச்சனை மற்றும் கடவுள் அய்யப்பன் பிரச்சனையை தேர்தல் பிரச்சாரங்களில் பயன்படுத்தக்கூடாது என்கிற தேர்தல் ஆணையத்தின் கட்டளையையும் எப்படி மீறியிருக்கிறார் என்பதற்கு, இது மிகவும் சரியான எடுத்துக்காட்டாகும்.சபரிமலை பிரச்சனையில் உச்சநீதி மன்றத்தின் தீர்ப்பை அமல்படுத்தியதற்காக கம்யூனிஸ்ட்டுகளையும், கேரள இடது ஜனநாயக முன்னணி அரசாங்கத்தையும் குற்றஞ்சாட்டியிருப்பதன் மூலம் நிச்சயமாக மோடி தேர்தல் பிரச்சாரத்தின் எல்லைகளை மீறியிருக்கிறார். அவர் மீது உடனடியாக உரிய நடவடிக்கை எடுத்திட வேண்டும்.
தலைமைத் தேர்தல் ஆணையத்திற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் நிலோத்பால் பாசு எழுதியுள்ள கடிதம்