tamilnadu

img

இளம் விஞ்ஞானிக்கு பாராட்டு

ஓசூர்,ஜன.12- தேசிய குழந்தைகள் அறி வியல் மாநாட்டில் சாதனை படைத்த ஓசூர்அரசுப் பள்ளி மாணவி இளம் விஞ்ஞானி வித்யாஸ்ரீக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது. 27 வது தேசிய குழந்தை கள் அறிவியல் மாநாடு டிசம்பர் 27 முதல் 31 வரை திருவனந்தபுரத்தில் நடை பெற்றது. மாநாட்டை கேரள முதல்வர் பினராயி விஜயன் தொடங்கி வைத்தார். நிறைவு விழாவில் குடியரசு துணைத் தலைவர் வெங்கையா நாயுடு கலந்து கொண்டார்.  தமிழ்நாட்டிலிருந்து 30 ஆய்வுகளும், தேசிய அளவில் 650 ஆய்வுகளும் சமர்ப்பிக்கப்பட்டது.  தமிழகத்தின் 2 ஆய்வுகள் உட்பட 39 தேர்வுகள் செய்யப்பட்டது. அதில் ஓசூர் அருகே பூனப்பள்ளி ஊராட்சி ஒன்றிய நடு நிலைப் பள்ளி மாணவி வித்யாஸ்ரீயின் ‘பார்த்தினிய செடிகளை அழித்து அதிலி ருந்து பூச்சிக் கொல்லி மருந்து’ தயாரிக்கும் ஆய்வும் மிகச் சிறந்ததாக தேர்வு செய்யப்பட்டுள்ளது. பூனப்பள்ளி ஒன்றிய நடுநிலைப் பள்ளியே மிகச்சிறந்த ஆய்வு சமர்ப்பித்த பள்ளியாகவும் தேர்வு செய்யப்பட்டது. குழந்தை விஞ்ஞானி விருது பெற்ற வித்யாஸ்ரீ, பெற்றோர் , மற்றும் அரசுப் பள்ளி மாணவர்களுக்கும், ஊக்கப்படுத்திய ஆசிரி யர்களுக் கும் தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் சார்பில் பாராட்டு நிகழ்ச்சி பள்ளியில் நடைபெற்றது. மாவட்ட ஒருங்கிணைப்பா ளர் பாரதிராஜா தலைவர் சர்ஜான், செயலாளர் பால கிருஷ்ணன், நிர்வாகி சந்தோஷ்,மாநில செயற் குழு உறுப்பினர் சிவக்குமார், முனைவர் சேதுராமன் உட்பட பலர் கலந்து கொண்ட னர்.

;