tamilnadu

img

சிக்கலில் ஸ்டார் நிறுவனம்

12-வது உலகக்கோப்பை தொடருக்கு ஸ்டார் ஸ்போர்ட்ஸ் நிறுவனம் கோடிக்கணக்கில் திட்டம் வகுத்து, லாபம் பார்க்க உலகக்கோப்பை தொடரில் பங்குதாரராக உள்ளது. ஒவ்வொரு போட்டிக்கும் விளம்பர வருவாய் கோடிக்கணக்கில் கிடைக்கும் என்பதால் உலகக்கோப்பை தொடரில் கோடிக்கணக்கில் சுருட்டிவிடலாம் என ஸ்டார் நிறுவனம் கனவு கண்டது. ஆனால் இங்கிலாந்து மைதானங்களுக்குப் பயிற்சி மேற்கொள்ள வரும் மழையால் ஒரு சில ஆட்டங்கள் ரத்தாகிறது. போட்டி நடைபெறும் காலத்தில் ஒரு ஓவருக்கான இடைவெளியின் போது 3 விளம்பரங்களை ஒளிபரப்பலாம். உலக அளவிலான தொடர் என்பதால் தங்கள் பிராண்டை மக்கள் கண்டிப்பாக அறிவார்கள் என தனியார் நிறுவனங்கள் போட்டி போட்டு ஸ்டார் நிறுவனத்திற்கு தாறுமாறாக விளம்பர ஒப்பந்தம் செய்தது. ஆனால் மழை காரணமாகப் போட்டி ரத்தானால் ஓவர்கள் அடிப்படையில் விளம்பரம் செய்யமாட்டார்கள் என்பதால் விளம்பர ஒப்பந்தம் மந்தமாக இருக்கிறது. மழையால் இருக்கின்ற வருமானமும் போய்விடுமோ என ஸ்டார் நிறுவனம் கவலையில் உள்ளது.