கிரிக்கெட் உலகில் வேகப்பந்துவீச்சை விரும்பாத தேசத்தில் 150 கிமீ வேகத்தில் பந்துவீசும் ஒரு நபர் அணியில் புதிதாக இணைந்தால் அது ஆச்சரியமான நிகழ்வு தானே. அந்த ஆச்சரியமான நிகழ்வு இந்திய கிரிக்கெட் உலகில் நிகழ்ந்துள்ளது. அது இளம் வீரர் நவதீப் சைனியால் தான். காரணம் இந்திய வீரர்கள் பெரும்பாலும் 140 கிமீ வேகத்தில் தான் பந்துவீசுவார்கள். ஆனால் நவதீப் சைனி சராசரியாக 150 கிமீ வேகத்தில் பந்துவீசுகிறார். இதுதான் அவரது புகழுக்குக் காரணம். சாதனை ஏதும் படைக்காமல் தனது வேகப்பந்துவீச்சால் குறுகிய காலத்தில் நவதீப் சைனி பிரபலமடைந்துள்ளார்.