tamilnadu

img

எல்லை மீறும் மேரிகோம்... - சதீஸ் முருகேசன்

சண்டே ஸ்பெஷல்...

36 வயது.... 51 கிலோ... 1.58 செமீ உயரம்... 6 முறை உலக சாம்பி யன்... பத்மஸ்ரீ, பத்மபூஷன் விருது... மணிப்பூர் மங்கை... இந்தியாவில் பல பெண் களுக்கு ரோல் மாடல்... பெண்கள்குத்துச் சண்டை என்று உச்சரித்தாலே இவரின் பெயர் தான் ஞாபகம்... அந்த பெயர் தான் மேரிகோம்...  இந்தியா மட்டுமின்றி ஆசிய - ஓசியானிய பகுதிகளுக்கு இவர் தான் பெண்கள் குத்துச் சண்டையின் குறியீடு. 2001-ஆம் ஆண்டு முதல் இன்று வரை சுமார் 18 ஆண்டுகள் மேரி கோம் என்றால் சாதனை, சாதனை என்றால் மேரி கோம் என்று தொலைக்காட்சி ஊடங்கங்க ளும், செய்தி நிறுவனங்களும் செய்தி வெளி யிட்டு வருகின்றன. ஆனால் கடந்த 2019-ஆம் ஆண்டு முழுவதும் சாதனைகளை விட வேத னையான செய்திகள் மூலம் தனக்கு தானே செயற்கையாகச் சர்ச்சைகளை உருவாக்கி அவற்றிற்கு தானே தீனி போட்டுக்கொண்டார்.

சர்ச்சைக்குக் காரணம் 

அடுத்த தலைமுறைக்கு மேரிகோமை போல தனது அதிரடியால் வளர்ந்து கொண்டி ருக்கும் தெலுங்கானா மாநிலம் நிஜமாபாத் மாவட்டத்தைச் சேர்ந்த 23 வயது இளஞ்சிங் கம் நிகாத் ஜரீன். இளையோர் பிரிவில் தேசம், சர்வதேசம் என இரண்டிலும் பல்வேறு சாதனைகளைப் படைத்தவர். 2019-ஆம் ஆண்டு சீனியர் தாய்லாந்து சர்வ தேச குத்துசண்டை போட்டியில் களமிறங்கி முதன்முதலாக வெண்கலம் வென்று புதிய வரலாறு படைத்தார். இதனிடையே ஒலிம்பிக் தகுதி சுற்று 51 கிலோ எடை பிரிவில் மேரிகோம் நேரடி யாகத் தகுதி பெறுவதாக இந்தியக் குத்துச் சண்டை சம்மேளனம் அறிவிக்க வெடித்தது சர்ச்சை. மேரிகோம், ஜரீன் இருவருமே ஒரே பார்மில் இருப்பதால் இந்த முடிவு கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது. 

கொதித்த நிகாத் ஜரீன்

இந்த விவகாரம் குறித்துக் கொதித்தெ ழுந்த நிகாத் ஜரீன்,”மேரி கோம் மிகப்பெரிய லெஜண்ட் என்பது பற்றி எனக்குக் கவலை இல்லை. நானும் பல உலக சாம்பியன்களை வீழ்த்தியுள்ளேன். விளையாட்டில் நேர்மை வேண்டும்” என விளையாட்டு முதல் அரசியல் துறை வரை அனைவரையும் தனது பேட்டி யில் வறுத்தெடுத்தார்.  போதாக்குறையாக ஒலிம்பிக் துப்பாக்கி சுடுதலில் தங்கம் வென்ற இந்திய நட்சத்திரம் அபினவ் பிந்த்ரா,நிகாத் ஜரீனுக்கு ஆதர வாகக் கருத்து தெரிவிக்க மேரிகொம் வீதிச் சண்டையில் இறங்கியது போல இரு வருக்கும் ஒரே பேட்டியில் ஆக்ரோஷமாக பதி லடி கொடுத்தார். அவர் அளித்த அதிரடி பேட்டி யில்,”நிகாத்  ஜரீன் என்பவர் யார். நான் அவரைப்பற்றிக் கேள்விப்பட்டதே இல்லை. இந்தியக் குத்துச்சண்டை சம்மேளனம் யாரை அனுப்ப வேண்டும் என அவர்கள் முடிவு செய்வார்கள். ஜரீனால் இந்திய அணி யில் தேர்வாக முடியவில்லை என்பதற்காக அழுதுகொண்டிருக்கிறார். அபினவ் பிந்த்ரா குத்துச்சண்டை விவகாரத்தில்  நுழைவது அவருக்கு வேண்டாத வேலை. இந்த விவ காரத்தில் அவர் அமைதியாக இருக்க வேண்டும்” என கோபமாகப் பேசினார். மேரி கோமின் இந்த ஆக்ரோஷ பேட்டிக்கு அவரது ரசிகர்களே முகம் சுளித்தனர்.  

செயலிலும் ஆக்ரோஷம் 

இந்த பிரச்சனைக்குப் பின் விதிகளை ஆராய்ந்த இந்திய குத்துச்சண்டை சம்மேள னம் டிசம்பர் மாதத்தின் கடைசி வாரத்தில் பெண்கள் 51 கிலோ பிரிவிற்கான தகுதி சுற்றுப் போட்டியை நடத்தியது. தொடக்கம் முதலே பரபரப்பாக நடைபெற்ற இந்த ஆட்டத்தில் 9-1 என்ற புள்ளிக் கணக்கில் மேரிகோம் வெற்றி பெற்று சீனாவில் பிப்ரவரி மாதம் ஒலிம்பிக் தகுதிச்சுற்றில் இந்தியா சார்பில் பங்கேற்கச் சான்றிதழ் பெற்றார்.   போட்டியின் முடிவுகள் பிரச்சனை யின்றி நிறைவு பெற்றாலும், வெற்றி பெற்ற பின் மேரிகோம் நிகாத் ஜரீனை கைகுலுக்க லுடன் கட்டி அணைக்க மறுத்துவிட்டார். இது மிகுந்த சர்ச்சையை ஏற்படுத்தியது. ஆட்டம் நிறைவு பெற்றவுடன் செய்தியாளர்கள் இது பற்றி வினவியவுடன் கோபமடைந்த மேரிகோம், ”பிறர் நம்மை மதிக்க வேண்டும் என விரும்பினால் நாம் மற்றவர்களை மதிக்க வேண்டும். அத்தகைய குணம் இல்லாத வர்களை நான் மதிக்கமாட்டேன்” எனக் கறா ராகப் பதில் அளித்தார். 

இது குறித்து நிகாத் ஜரீன் கூறியதா வது,”மேரிகோம் இந்த அளவுக்குக் கோபம் அடைவார் என்று எதிர்பார்க்கவில்லை. தகுதி போட்டி நேர்மையாக, முறைப்படி நடத்தப்பட வேண்டும் என்று தான் போராடினேன். தவிர மேரிகோமை எதிர்க்கவில்லை. அவர் முன் நாங்கள் எல்லாம் கத்துகுட்டிகள். அவர் இளம் தலைமுறையினருக்கு முன்னுதாரணமாக விளங்க வேண்டும்” என அழுகு குரலில் பேசினார்.  மேரிகோமை விட 13 வயது இளையவ ரான நிகாத் ஜரீனின் பேட்டிக்கு ரசிகர்கள் ஆதரவு அளித்தனர். பலர் மேரிகோமிற்கு சமூக வலைத்தளங்கள் மூலம் அறிவுரை கூறி னர். விளையாட்டு உலகில் நன்கு பழுத்த அனுபவம் உடைய தாய் குலமான மேரிகோம் தன்னை விட 13 வயது சிறியவரான நிகாத் ஜரீனின் ஆர்வமிக்க செயலை உண்மையில் பாராட்டியிருக்க வேண்டும். விதிகளை அழிக்க கூடாது என்பதற்காகப் போராடிய ஜரீனுக்கு சான்றிதழ் அளிக்க வேண்டாம். வாயால் சிறிய அங்கீகாரம் அளித்திருக்க வேண்டும். ஆனால் கத்துக்குட்டியின் பேச்சை பொறுத்துக்கொள்ள முடியாமல் பழிவாங்கும் முனைப்பில் பேசியது, செய லில் இறங்கியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

பிரச்சனைக்கு யார் காரணம்?

மேரி கோம் நிகாத் ஜரீன் பிரச்சனைக்கு அரசியல் ஆதிக்கம் தான் காரணம். அரசியல் தலையீடு இன்றி தகுதி சுற்று நடத்தாமல் மேரிகோமை நேரடியாக ஒலிம்பிக் தொடருக்கு தேர்வு செய்திருக்க முடியாது. அதற்கான விதிகள் இல்லை. தகுதி சுற்று நடத்தியிருந்தால் பிரச்சனையை உருவாக்கியிருக்காது.  எல்லாவற்றிற்கும் காரணம் இந்திய குத்துச்சண்டை சம்மேளனம் தான்.

மேரிகோம் செய்தது சரியா?

எந்தவொரு விளையாட்டாக இருந்தாலும் அந்த விளையாட்டின் விதிகள் படி கண்டிப்பாக நடக்க வேண்டும். அதாவது கிரிக்கெட் முடிவில் கைகுலுக்கல், கபடி முடிவில் பயிற்சியாளரிடம் ஆசிர்வாதம், குத்துச்சண்டையில் கைகுலுக்கல், கட்டி அணைத்தல் போன்ற விதிகள் உள்ளன. எனவே மேரிகோம் செய்தது தவறானது தான். சாதாரண தகுதி சுற்று என்பதால் தான் தப்பித்தார். சர்வதேச தொடர்களாக இருந்தால் ஆண்டுக்கணக்கில் தடை உத்தரவு பெற்றிருப்பார்.


 

;