tamilnadu

img

தோழர் சுகுமால் சென் நினைவு நாள்...

தோழர் சுகுமால்சென் 1934 ஜுன் 22ல் பிறந்தார். சுகுமால் தா என்று தோழர்களால் அழைக்கப்பட்ட இவர் உலக தொழிற்சங்க சம்மேளனத்துடன் இணைந்த சர்வதேச பொது ஊழியர் மற்றும் தொழிலாளர் அமைப்பின் பொதுச் செயலாளராகப் பணியாற்றினார். இந்தியா முழுவதும் உள்ள மாநிலங்களில் பணிபுரியும் அரசு ஊழியர்களை உறுப்பினர்களாகக் கொண்ட அகில இந்திய மாநில அரசு ஊழியர் சம்மேளனத்தின் பொதுச் செயலாளராக நீண்டகாலம் பணியாற்றினார். இவரது இறுதிக் காலத்தில் இவ்வமைப்பின் கௌரவத் தலைவராகவும் செயல்பட்டார். 1971 -ஆம் ஆண்டு மேற்கு வங்க காங்கிரஸ் அரசால் பணிநீக்கம் செய்யப்பட்டார். பின்னர் 1977-ல் இடது முன்னணி வெற்றி பெற்று ஜோதிபாசு முதல்வராக பதவிக்கு வந்த பின்னர் மீண்டும் பணியில் சேர்க்கப்பட்டார்.
இந்திய தொழிற்சங்க மையத்தின் அகில இந்திய துணைத் தலைவராகச் செயல்பட்ட இவர் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் மத்தியக் குழு உறுப்பினராகத் திறம்படப் பணியாற்றியவர்.  1982 முதல் 1994 வரை மாநிலங்களவை உறுப்பினராக மாநிலங்களவையில் தொழிலாளி வர்க்கத்தின் உரிமைகளுக்காக முழங்கினார்.தோழர் சுகுமால்சென் இந்தியத் தொழிலாளி வர்க்கம் குறித்தும் ரஷ்யப் புரட்சியும் எதிர்ப் புரட்சியும் குறித்தும் என பல நூல்களை எழுதியுள்ளார்.இவர் 2017 நவம்பர் 22ல் 83ஆம் வயதில்  கொல்கத்தாவில் காலமானார். இவரது விருப்பப்படி கொல்கத்தா மருத்துவக் கல்லூரி மாணவர்களின் ஆராய்ச்சிக்காக இவரது உடல் கொடையளிக்கப்பட்டது.

;