குளித்தலை, டிச.17- கரூர் மாவட்டம் குளித்தலை போக்குவரத்துக் காவல் நிலையம் சார்பாக காவலன் கைபேசி செயலி விழிப்புணர்வு கூட்டம் குளித்தலை பேருந்து நிலையத்தில் நடைபெற்றது. போக்குவரத்து காவல் ஆய்வாளர் கார்த்திகேயன் தலை மையில் உதவி ஆய்வாளர் மற்றும் காவலர்கள், சுபசக்தி கல்லூரி மாணவிகள் பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற் படுத்தினர். இதில் ஏராளமான கல்லூரி மற்றும் வேலைக்கு செல்லும் பெண்கள், காவலன் செயலியை தங்களது கைபேசி யில் பதிவிறக்கம் செய்தனர்.