கடலூர் நகரத்தில் வீடுகளுக்கே சென்று தீக்கதிர் சந்தா சேர்ப்பு இயக்கத்தில் மார்க்சிஸ்ட் கட்சியின் மத்தியக்குழு உறுப்பினர் உ.வாசுகி கலந்துகொண்டார். கட்சித் தோழர்கள், ஆதரவாளர்களின் வீடுகளுக்கு சென்று குடும்பத்தினரிடம் தீக்கதிர் படிப்பதன் நோக்கம் குறித்து பேசி புதிதாக சந்தாக்களை சேர்த்தார். மாவட்டச் செயலாளர் டி.ஆறுமுகம், மாநிலக்குழு உறுப்பினர் ஜி.மாதவன், செயற்குழு உறுப்பினர்கள் எம்.மருதவாணன், வி.சுப்புராயன், நகரச் செயலாளர் ஆர்.அமர்நாத் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.