tamilnadu

மருத்துவ காப்பீட்டு திட்டத்தை அமல்படுத்துக

 கடலூர், ஜூன் 15- தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக ஓய்வு பெற்றோர் நல அமைப்பின் ஆண்டு பேரவைக் கூட்டம் கடலூரில் சனிக்கிழமை நடைபெற்றது. கிளைத் தலைவர் பி.பாண்டியன் தலைமை தாங்கினார். மாநிலக் குழு உறுப்பினர் டி.கலியமூர்த்தி ஜி.பாலசுந்தரம், ஜி.ராமச்சந்தி ரன், ஏ.செல்வராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். தமுஎகச மாவட்டச் செயலாளர் பால்கி, சிஐடியு மாவட்டத் தலைவர் ஜி.பாஸ்கரன், மாநில துணைச் செயலாளர் ஏ.சகாதேவன் ஆகியோர் வாழ்த்திப் பேசினர். சங்கத்தின் மாநில துணைத் தலைவர் ஜி.ராமச்சந்திரன் கலந்து கொண்டு பேரவையை நிறைவு செய்து பேசினார். கே.குணசேகரன் நன்றி கூறினார். புதிய பென்ஷன் திட்டத்தை கைவிட வேண்டும், 1.4.2003க்கு பின் பணியமர்த்தப்பட்ட தொழிலாளர்களை தற்போதுள்ள கழக ஓய்வூதியத் திட்டத்தில் இணைக்க வேண்டும், ஓய்வுபெறும் அன்றே அனைத்து பணப்பலன்களை யும் வழங்க வேண்டும், பிரதி மாதம் 1ம் தேதி ஓய்வூதியம் வழங்க வேண்டும், நிலுவை தொகைகள் அனைத்தையும் வழங்குவதுடன், ஓய்வுக்கால சேம நல திட்டத்தையும் அமல்படுத்த வேண்டும் உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. புதிய மாவட்டத் தலைவராக பி.பாண்டியன், செயலாள ராக ஆர்.பழனிவேல், பொருளாளராக கே.குணசேகரன், துணைத் தலைவர்களாக வி.அரிகிருஷ்ணன், எம்.சௌந்தரராஜன், டி.கண்ணன், துணைச் செயலாளராக கே.ஆறுமுகம், ஏ.சோமசுந்தரம், டீ.சேகர் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர்.