tamilnadu

img

கடலூர் மாவட்டத்தில் வெள்ளப் பாதிப்பு ஏற்படாத வகையில் கட்டமைப்பு அவசியம்.... ஜி.ராமகிருஷ்ணன் பேட்டி...

கடலூர்:
கடலூர் மாவட்டத்தில் எதிர்காலத்தில் வெள்ளப் பாதிப்பு ஏற்படாத வகையில் கட்டமைப்புகளை உருவாக்க வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக் குழு உறுப்பினர் ஜி.ராமகிருஷ்ணன் தெரிவித்தார்.

இம்மாவட்டத்தில்  குறிஞ்சிப்பாடி பகுதியில் மழை வெள்ள பாதிப்புகளை வியாழனன்று (டிச.10) பார்வையிட்ட பின் செய்தியாளர்களி டம் அவர் பேசினார்.பெரு மழை, பெருவெள்ளம் ஏற்பட்டால் இந்த பகுதி முழுவதுமே தண்ணீரில் மூழ்கி விடுகிறது.  பரவனாறும், செங்கால் ஓடையும் உடைப்பெடுத்து கிராமங்களுக்குள்ளும், வயல்வெளிகளி லும் புகுந்து விடுகின்றன. கடலூர் மாவட்டத்தில் ஏறக்குறைய 1.5 லட்சம் ஏக்கருக்கு மேல் பயிர் பாதிக்கப்பட்டுள்ளது.  கல்குணம் மாதிரி உள்ள கிராமங்களில் ஏராளமான கிராமங்கள் தண்ணீர் சூழப்பட்டு உள்ளது.  

ரூ.5ஆயிரம் கோடி தேவை
கடந்த 2015ஆம் ஆண்டு வெள்ளத்தின் போது சரியாக பராமரிப்பு இல்லாததால் மாவட்டம் முழுவதுமே வெள்ளக்காடாக மாறியது. அனைவருமே படகில் செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டது. ஆனால் தற்போது ஓரளவிற்கு ஆறுகள் தூர்வாரப்பட்டு உடனடியாக தண்ணீர் வடிகிறது.  இப்பொழுது வெள்ளம் வந்தாலே வீடுகளில் தங்க முடியாது, வெளியேறதான் வேண்டும் என்ற நிலைமை   இருக்கின்றது.  இந்தச் சூழ்நிலையில் அமைச்சர்கள் முகாமிட்டு பார்வையிட்டு சென்று உள்ளார்கள். ஆனால் மாநில அரசிற்கு மத்திய அரசு போதுமான நிதியை அளித்தால்தான் இந்த பணிகளை செய்ய முடியும். தற்போது ஏற்பட்ட பாதிப்பிற்கு குறைந்தபட்சம் 5,000 கோடி ரூபாயாவது மத்திய அரசு வழங்க வேண்டும்.

மக்களை திரட்டிபோராட்டம்
இந்தப் பகுதிகளுக்கு எத்தகையவெள்ளம் வந்தாலும் பாதிப்புஏற்படாத வகையில் அவர்களுக் கான வீடுகளை கட்டிக் கொடுக்க வேண்டும், அதேபோல் சாலைகளை செப்பனிட வேண்டும், வடிவங்களைஉருவாக்க வேண்டும் இந்த அடிப்படை கட்டமைப்புகளை மாற்று வதற்கான பணியை மாவட்ட நிர்வாகமும் அரசும் செய்யவில்லை என்றால் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மிகப் பெரிய போராட்டத்தை மக்களை திரட்டி நடத்தும் என்றார்.குறிஞ்சிப்பாடி ஒன்றியம் கல்குணம் ஊராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் தண்ணீர் தேங்கி இருந்தவயல்வெளி மற்றும் தண்ணீர் சூழ்ந்த வீடுகளையும் பார்வையிட்டு அந்த பகுதி மக்களுக்கு ஆறுதல்கூறினார். அதேபோல் வெள்ளப்பெருக்கு எடுத்த பரவனாற்றையும் பார்வையிட்டார். என்எல்சி உபரி நீர் மற்றும் மழைநீர் ஒன்று சேர்ந்து வந்து செங்கால் ஓடையில் தரைப்பாலம் உடைந்ததையும் பார்வை யிட்டனர். இதில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலாளர் டி.ஆறுமுகம், மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் பி. கருப்பையன், வி .உதயகுமார், ஜிஆர்.ரவிச்சந்திரன், மாவட்டக் குழு உறுப்பினர் எம்.முத்துக்குமாரசாமி, ஒன்றிய செயலாளர் எம்.பி.தண்டபாணி, வடலூர்நகர செயலாளர் நமச்சிவாயம், ஒன்றியக்குழு உறுப்பினர்கள் எஸ்.எஸ்.ராஜ், எம்.மணி, வி.கிருஷ்ணமூர்த்தி, ராதா, சிவகாமி மெய்யழகன் உள்ளிட்ட ஏராளமானோர் சென்று பார்வையிட்டனர்.

;