tamilnadu

img

கடலூர் மூத்த தோழர் குமரேசன் காலமானார்

கடலூர், ஆக.18- மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தோழரும் ஹோட்டல் சங்கத்தை உருவாக்கிய தலைவர்களில் ஒருவரும், நடைபாதை வியாபாரி கள் சங்க தலைவர் தோழர் ப.குமரேசன் (85) செவ்வாய்க்  கிழமை (ஆக. 18) அதிகாலை காலமானார். புதுப்பாளையத்தில் கள்ளச்சாராயத்தை எதிர்த்துப் போராடி வீர மரணம் அடைந்த குமார், ஆனந்தனின் மறைவை அடுத்து, அந்த பகுதியில் மார்க்சிஸ்ட் கட்சி தோழர்களுக்கும், வாலிபர் சங்க தோழர்களுக்கும் புது உற்சாகம் ஊட்டி பல்வேறு ஆதரவுகளை வழங்கியவர் குமரேசன். இக்கட்டான காலக்கட்டங்களில் அவர் தனது பிள்ளைகளை கட்சி  பணியாற்ற அனுமதித்தார். அவரது உடலுக்கு மாநிலக் குழு உறுப்பினர் கோ.மாதவன், மாவட்ட  செயற்குழு உறுப்பினர்கள் எம்.மருதவாணன், பி.கருப்பையன், வி.சுப்பரா யன், மாவட்டக்குழு உறுப்பினர் ஆர்.தமிழரசன்,  நகரச் செயலாளர் ஆர். அமர்நாத் உள்ளிட்ட பலர் மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினர். அவரது உடல் கெடிலம் நதிக்கரையில்  அடக்கம் செய்யப்பட்டது.  அவருக்கு செல்வராஜ், முருகேசன், கண்ணன், பப்பி வேலன், கணேசன் ஆகிய மகன்கள் உள்ளனர்.