ஒட்டப்பிடாரம் சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடும் திமுக வேட்பாளர் சண்முகையாவை ஆதரித்து மே 9 வியாழனன்று தொகுதியில் பல்வேறு மையங்களில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் பிரச்சாரம் மேற்கொண்டார். கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினர் க.கனகராஜ், மாவட்டச் செயலாளர் கே.எஸ்.அர்ச்சுணன், ஒட்டப்பிடாரம் ஒன்றிய செயலாளர் ராகவன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.