கருணாநிதி நினைவு தின பொதுக்கூட்டத்தில் மு.க.ஸ்டாலின் பேச்சு
சென்னை, ஆக. 8- மாநில சுயாட்சிக்கு அச்சு றுத்தல் ஏற்பட்டுள்ளதாக சென் னையில் நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கூறினார். முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் முதலாம் ஆண்டு நினைவு தினத்தை யொட்டி சென்னை கோடம்பாக் கத்திலுள்ள முரசொலி அலுவ லகத்தில் அவரது சிலையை மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி திறந்து வைத்தார். அதனைத் தொடர்ந்து ராயப் பேட்டை ஒய்.எம்.சி.ஏ. மைதா னத்தில் கருணாநிதியின் நினைவு தின பொதுக் கூட்டம் திரவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி தலைமையில் நடைபெற்றது. முரசொலி செல்வம் வர வேற்றார். கூட்டத்தில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பேசுகையில், “பகுத்தறிவுக்கும், சுயமரியா தைக்கும், மொழி பற்றுக்கும், சமூக நீதிக்கும், மாநில சுயாட்சிக்கும் அச்சுறுத்தல் உருவாகியிருக்கிறது” என்றார். ஒரே நாடு, ஒரே தேர்தல், ஒரே அடையாள அட்டை என எல்லா வற்றையும் தில்லியில் குவித்துக் கொள்கிறார்கள். அதனால்தான் கட்சியை 50 ஆண்டு களாக வளர்த்துக் கொடுத்தவர் கலைஞர் முன்பை விட நமக்கு இன்னும் அதிகம் தேவைப்படுகிறார் என்றும் ஸ்டாலின் கூறினார்.
ஹைட்ரோ கார்பன் திட்டம், பொருளாதார இடஒதுக்கீடு, சிறுபான்மையினர் மீது தாக்குதல், தபால் தேர்வுகளில் இந்தி திணிப்பு, 8 வழிச் சாலை, புதிய கல்விக் கொள்கை, அணை பாதுகாப்பு மசோதா, நீட் தேர்வு, நெக்ஸ்ட் தேர்வு போன்ற பல்வேறு பிரச்சனைகளுக்காக மக்களவையில் போராடிக் கொண்டிருக்கும் திமுக கூட்டணிக் கட்சி எம்பிக்கள் மக்களவையையே நடுங்க வைத்துக் கொண்டிருக்கின்றனர் என்றும் அவர் தெரிவித்தார். இப்போது உச்சகட்டமாக காஷ்மீர் பிரச்சனை வந்திருக்கி றது. பரூக் அப்துல்லா இந்த நிகழ்விற்கு வந்திருக்க வேண்டும். ஆனால் வரவில்லை ஏன்? அவர் வீட்டு சிறையில் வைக்கப்பட்டுள்ளார். காஷ்மீர் மாநிலத்திற்கு வழங்கப்பட்டி ருந்த சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்யக் கூடாது என்பதுதான் திமுகவின் நிலை எனவும் ஸ்டாலின் கூறினார்.
கூட்டத்தில் மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி, புதுவை முதல்வர் நாராயண சாமி, கவிபேரரசு வைரமுத்து ஆகியோர் உரையாற்றினர். திமுக பொருளாளர் துரை முருகன், மக்களவை உறுப்பி னர்கள் தினேஷ்திரிவேதி (மேற்கு வங்கம்), கனிமொழி, தயாநிதிமாறன், டி.ஆர்.பாலு, இளைஞர் அணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின், மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பால கிருஷ்ணன், இந்திய கம்யூ னிஸ்ட் கட்சியின் மாநிலச் செய லாளர் இரா.முத்தரசன், மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசிய தலைவர் காதர் மொய் தீன் உள்ளிட்ட கூட்டணிக் கட்சித் தலைவர்கள் கலந்து கொண்ட னர்.