tamilnadu

சட்டப்படிப்பு : கலந்தாய்வு இன்று தொடக்கம்

சென்னை, ஜுன் 16- தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகத்தில், 5 ஆண்டு  ஒருங்கிணைந்த சட்டப்படிப்பு களுக்கான கலந்தாய்வு திங்கட்கிழமை (இன்று) தொடங்குகிறது. பி.காம் எல்.எல்.பி, பிசிஏ எல்.எல்.பி, பிஏ எல்.எல்.பி மற்றும் பிபிஏ எல்.எல்.பி ஆகிய சட்டப்படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கையை தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்ட பல்கலைக் கழகம் அறிவித்திருந்தது. இதற்கென முறையே விண்ணப்பம் பெறப்பட்டு, தரவரிசை அடிப்படையில் கட்-  ஆப் மதிப்பெண் பட்டியல் வெளி யிடப்பட்டது. இந்நிலையில் பி.காம் எல்.எல்.பி, பிசிஏ எல்.எல்.பி படிப்புக்களுக்கான கலந்தாய்வு திங்கட்கிழமை தொடங்கி ஜூன் 19ம் தேதி வரை நடைபெற வுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதேபோல் பிஏ எல்.எல்.பி மற்றும் பிபிஏ எல்.எல்.பி படிப்புகளுக்கான கலந்தாய்வு 18ம் தேதியும், காத்திருப்போர் பட்டியலில் இருக்கும் மாணவர்களுக்கான கலந்தாய்வு 19ம் தேதியும் நடைபெறவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.