tamilnadu

img

விவசாய தொழிலாளர் சங்க அகில இந்திய மாநாடு

கண்ணூரில் எழுச்சியுடன் துவங்கியது

கண்ணூர், ஜன. 1- அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்கத்தின் ஒன்பதாவது தேசிய மாநாடு புதனன்று (ஜன.1) கேரள மாநிலம் கண்ணூரில் எழுச்சி மிகு கொடியேற்ற நிகழ்ச்சியு டன் துவங்கியது. நாயனார் அகாடமியில் பி.கே.குஞ்ஞச் சன் நகரில் காலை 11 மணிக்கு பிரதிநிதிகள் மாநாட்டை அகில இந்திய விவசாயிகள் சங்கத்தின் துணை தலைவர் எஸ்.ராமச்சந்திரன்பிள்ளை துவக்கி வைத்தார். மோடி அரசின் நவீன தாரா ளமய செயல்பாடுகளின் மிகப் பெரிய அச்சுறுத்தலை எதிர் கொண்டு வருவது நாட்டில் உள்ள விவசாயிகளும், விவ சாயத் தொழிலாளர்களும் என அவர் குறிப்பிட்டார். தலித், சிறுபான்மையினர் கடுமையான பாகுபாடு களை சந்தித்து வருகிறார் கள் எனவும் அவர் கூறினார். அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்கத்தின் தலைவர் எஸ்.திருநாவுக் கரசு கொடி ஏற்றினார். பொதுச் செயலாளர் ஏ.விஜய ராகவன் அறிக்கை சமர்ப்பித் தார். அதைத் தொடர்ந்து பிரதி நிதிகள் விவாதம் துவங்கி யது. அகில இந்திய விவசாயி கள் சங்க பொதுச் செயலாளர் ஹன்னன்முல்லா உள்ளிட்ட பல்வேறு அமைப்புகளின் தலைவர்கள் வாழ்த்திப் பேச உள்ளனர். நாடு முழுவதும் உள்ள அனைத்து மாநிலங்க ளிலிருந்தும் சுமார் ஆயிரம் பிரதிநிதிகள் மாநாட்டில் பங் கேற்றுள்ளனர்.  டிசம்பரில் 3இல் பேரணி யுடன் மாநாடு நிறைவுபெற உள்ளது.

;