எண்ணூர் காமராஜர் துறைமுகம் விரிவுபடுத்தும் திட்டத்தை உடனே நிறுத்தக் கோரியும், வடசென்னையில் மீண்டும் வெள்ளம் ஏற்படும் நிலையை தடுக்கக் கோரியும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வடசென்னை மாவட்டக்குழு சார்பில் (நவ.21) சனிக்கிழமையன்று தாழங்குப்பத்தில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. சிபிஎம் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன், வடசென்னை மாவட்டச் செயலாளர் எல்.சுந்தரராஜன், மாவட்டசெயற்குழு உறுப்பினர்கள் டி.கே.சண்முகம், எஸ்.கே.மகேந்திரன், ஆர்.ஜெயராமன், எஸ்.ராணி உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.