tamilnadu

img

கோபிசெட்டிபாளையத்தில் தியாகி லட்சுமண அய்யரின் நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது

ஈரோடு மாவட்டம், கோபிசெட்டிபாளையத்தில் தியாகி லட்சுமண அய்யரின் நினைவு தினம் ஜனவரி 25ஆம் தேதி அனுசரிக்கப்பட்டது. இதனையொட்டி நடைபெற்ற சிறப்புகருத்தரங்கிற்கு தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாவட்ட செயலாளர் ஏ.எம்.முனுசாமி தலைமை வகித்தார். அகில இந்திய விவசாயிகள் சங்கத்தின் துணைத்தலைவர் கே.வரதராஜன் சிறப்புரையாற்றினார். சிபிஎம் மாவட்ட செயலாளர் ஆர்.ரகுராமன், சங்கத்தின் மாநில நிர்வாகி யு.கே.சிவஞானம், மாவட்டத்தலைவர் அண்ணாதுரை உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

;