ஈரோடு, ஜூன் 7- சத்தியமங்கலத்தையடுத்த கடம்பூர் பகுதியில் புகாரளிக்க செல்போனில் தொடர்பு கொண்டவரிடம் காவல் ஆய்வா ளர் குறையைக் கேட்காமல் தரக்குறை வாகப் பேசும் உரையாடல் சமூக வலை தளங்களில் பரவி வருகிறது. ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம் தாலுகாவிற்கு உட்பட்ட கடம்பூரையடுத்த கிளாத்தூர் பகுதியில் புதனன்று இரவு மாரியம்மன் கோவில் திருவிழா நடைபெற் றுள்ளது. இதில், சில மது அருந்தி விட்டு தகாத வார்த்தைகளால் பேசி ரகளையில் ஈடுபட்டுள்ளனர். இந்த நிலையில் பாது காப்புப் பணியில் காவலர்கள் யாரும் இல் லாத காரணத்தால் காளியப்பன் (35) என்ப வர் கடம்பூர் காவல் நிலையத்திற்கு தொடர்பு கொண்டு இது குறித்து புகார் தர முயன் றுள்ளார். தொலைபேசியை எடுத்த காவல் துறை ஆய்வாளர் விஜயகுமார், காளியப் பனை தரக்குறைவான வார்த்தைகளால் பேசி அழைப்பை துண்டித்துள்ளார். மீண் டும், ஆய்வாளரின் கைபேசிக்கு அழைத்து பிரச்சனை குறித்து கூற துவங்குவதற்கு உள்ளாகவே ஆவேசமாக இந்த எண்ணை யார் கொடுத்தது சொல்லுடா என ஒருமை யில் பேசியுள்ளார். இதனை பதிவு செய்த காளியப்பன் மாவட்ட காவல்துறை கண் காணிப்பாளரிடம் புகார் அளிப்பதாகக் கூறியதும், கைபேசி இணைப்பைத் துண் டித்துள்ளார் ஆய்வாளர் விஜயகுமார். இந்த உரையாடல் பதிவானது சமூக வலைதளங்களில் வைரலாகப் பரவி வருகி றது. இந்நிலையில், கடந்த ஒரு மாத காலமா கவே ஆய்வாளர் விஜயகுமார் காவல் நிலையத்திற்கு வரும் பிரச்சனைகளைக் கூட தீர்ப்பதற்கான நடவடிக்கை எடுக்கா மல், இரு தரப்பினர்களையும் தரக்குறை வாகப் பேசி வந்துள்ளார் எனப் பலரும் அவர் மீது குற்றம் சாற்றுகின்றனர்.