tamilnadu

img

அமெரிக்க ராணுவம் தாக்குதல்: ஈராக் ராணுவ தளபதி உள்ளிட்ட 8 பேர் பலி

ஈராக் தலைநகர் பாக்தாத்தில் உள்ள விமான நிலையத்தின் மீது அமெரிக்க ராணுவம்  ராக்கெட் குண்டுகள் மூலம் நடத்தப்பட்ட தாக்குதலில் 8 பேர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. 
ஈராக் தலைநகர், “பாக்தாத் சர்வதேச விமான நிலையம் மீது 3 ராக்கெட்டுகள் மூலம் தாக்குதல் நடத்தப்பட்டது. இந்த தாக்கதலில் ராணுவ தளபதி உட்பட 8 பேர்  கொல்லப்பட்டனர். விமான நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இரண்டு கார்கள் வெடித்து சிதறின. ராக்கெட்டுகள் விமான நிலையத்தில் சரக்குகள் கையாளும் பகுதியில் விழுந்து வெடித்தன” என்று ராணுவம் தரப்பில் தெரிவிக்கப்படுகிறது. 
இந்த தாக்குதல் சம்பவம் குறித்து அமெரிக்க ராணுவ தலைமையகமான பெண்டகன் வெளியிட்டுள்ள அறிக்கையில், அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் உத்தரவின் பேரிலேயே ஈராக் ராணுவ தளபதியை குறிவைத்து தாக்குதல் நிகழ்த்தப்பட்டது.  ஈராக் ராணுவ தளபதி, அமெரிக்க தூதரக அதிகாரிகள் மீதும் படை வீரர்கள் மீது தாக்குதல் நிகழ்த்தப்பட்ட திட்டம் வகுத்தார்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 
ஈராக் ராணுவ தளபதி, அமெரிக்க தாக்குதலில் கொல்லப்பட்டதும், அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப், தனது டுவிட்டர் பக்கத்தில் அமெரிக்காவின் கொடியை பதிவிட்டு இருந்தார். ஆனால்  இந்த பதிவுக்கு எந்த விளக்கத்தையும் அளிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

;