இராக்கின் வடக்குப் பகுதியில் உள்ள மொசுல் நகரில் பிரபல சுற்றுலாப் பகுதியாகக் கருதப்படும் டைகிரிஸ் நதிக்கு அருகில் குர்திஷ் புத்தாண்டை சிறிய அளவிலான கப்பல் ஒன்றில் வியாழக்கிழமை கொண்டாடப்பட்டது.
இந்த கொண்டாட்டத்தின்போது திடீரென விபத்து ஏற்பட்டதில், கப்பல் கவிழ்ந்தது. இதில் மூழ்கி 100 பலியாகினர். இந்த விபத்தில் இருந்து 55 பேர் மீட்கப்பட்டுள்ளனர். மீட்கப்பட்டவர்களில் பலர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அளவுக்கு மீறி நபர்களை ஏற்றியதே விபத்துக்குக் காரணம் என்று செய்திகளில் கூறப்படுகிறது.
இந்த விபத்தை நேரில் சென்று பார்வையிட்ட பிறகு இராக் பிரதமர் அடெல் அப்தெல் மஹ்தி, மூன்று நாட்கள் தேசம் முழுவதும் துக்க தினமாக அனுசரிக்கப்படும் என்று அறிவித்தார்.