தங்கம் தென்னரசு(திமுக): தமிழகத்தில் இடை நிற்றல் மாணவர்க ளின் எண்ணிக்கை 2016 - 17 ஆம் ஆண்டில் 3.7 விழுக்காடு என்றும் 2017 - 18 ஆம் ஆண்டில் 3.6 விழுக்காடாக குறைந்திருக்கிற என்று மாநில அரசு கூறுகிறது., ஆனால் மக்களவையில் மத்திய அரசு வெளியிட்ட புள்ளி விவரத்தில் இது முறையே 8 மற்றும் 16 விழுக்காடாக இருக் கிறது. இதில் உண்மை எது?
சுகாதாரத்துறையை பாராட்டி மத்திய அரசு பரிசு கொடுத்தால் புள்ளி விவரம் சரியாக இருக்கிறது என்று கூறும் இந்த அரசு, மாணவர்கள் இடை நிற்றல் அதிகமாக உள்ளது என்று மத்திய அரசு கூறும் புள்ளி விவரம் தவறானது என்று கூறுவதன் மர்மம்தான் என்ன?
அமைச்சர் செங்கோட்டையன்: இதற்கு முன்பு ஆசிரியர்கள் மூலம் புள்ளி விவரங்கள் எடுக்கப்பட்ட நிலையில் தற்போது ஆன்லைன் மூலமாக எடுக்கப்படுகிறது. இதனால் மாநில அரசின் புள்ளி விவரமே சரியானது.