tamilnadu

img

இந்நாள்... ஜனவரி 05 இதற்கு முன்னால்...

1914 - ஃபோர்டு கார் தொழிற்சாலையில் வேலை நேரத்தை 9 இலிருந்து 8 மணிநேரமாகக் குறைத்து, ஊதியத்தை 2.34 டாலரிலிருந்து 5 டாலராக உயர்த்தினார் ஹென்றி ஃபோர்டு! எட்டு மணி நேர வேலைக்கான போராட்டங்கள் 1800களின் பிற்பகுதியிலிருந்தே நடந்துகொண்டிருந்தாலும், அச்சகத்துறை உள்ளிட்ட மிகச்சில துறைகளில் நடைமுறைக்கும் வந்திருந்தாலும், மிகப் பெரும்பாலான தொழிலாளர்கள் நாளொன்றுக்கு 12இலிருந்து 14 மணிநேரம்வரை பணியாற்றிக்கொண்டிருந்த அக்காலத்தில், ஃபோர்டு எடுத்த இந்த நடவடிக்கை, எட்டு மணிநேர வேலை என்பதையே ஃபோர்டுதான் அறி முகப்படுத்தியதாகச் சிலர் குறிப்பிடுவதற்குக் காரணமாக அமைந்தது. உண்மையில், அவரது ஹைலேண்ட் பார்க் உள்ளிட்ட சில தொழிற்சாலை களில், பணிக்கு அடிக்கடி வராத தொழிலாளர்களின் எண்ணிக்கை, 10 சதவீதத்துக்கும் அதிகமாயிருந்த நிலை, மிகப் பெரிய விற்பனை யைக்கொண்டிருந்த அந்நிறுவனத்தின் உற்பத்திக்கு இடையூறாக இருந்தது. இதற்காகத்தான், இரண்டு 9 மணி ஷிஃப்ட்களை, மூன்று 8 மணி நேர ஷிஃப்ட்களாக மாற்றினார் ஃபோர்டு.

இந்நடவடிக்கை, பணிக்கு வராத தொழிலாளர்களின் எண்ணிக்கையை ஒரு சதவீதத்துக்கும் குறை வாக்கியது. கூடுதல் ஊதியத்துடன், இன்னொரு ஷிஃப்ட் அளவுக்குக் கூடுதல் தொழிலாளர்களையும் பணியமர்த்தியபோதும், உற்பத்தி உயர்வினால், அடுத்த இரு ஆண்டுகளில் ஃபோர்டு நிறுவனத்தின் லாபம் 30 மில்லியன் டாலரிலிருந்து, 60 மில்லியன் டாலராக உயர்ந்தது. இதனால், தொடக்கத்தில் ஃபோர்டை கடுமையாக விமர்சித்த போட்டி நிறு வனங்களும் இத்தகைய நடவடிக்கைகளை மேற்கொள்ளத் தொடங்கின. அத்துடன், 1926இல் வார வேலைநாட்களை, ஊதியக் குறைப்பின்றி,  ஆறிலிருந்து 5 ஆகக் குறைத்தது ஃபோர்டு நிறுவனம். இதைப்பற்றிச் செய்தியாளர்கள் கேட்டபோது, குடும்பத்துக்காகச் செலவிட போதிய நேரமிருந்தால்தான், ஒரு மனிதன் மகிழ்ச்சியோடு அனுபவிக்க (கார்  போன்ற!) பொருட்களை வாங்குவான், அதனால், விடுமுறை நாளை தொழிற்சாலை இழந்த நாளாகவோ, தொழிலாளி வர்க்கத்துக்கு வழங்கு தாகவோ பார்க்கக்கூடாது என்றார் ஃபோர்டு! அப்போது ஃபோர்டு கார் கம்பெனியின் தலைவராக இருந்த ஃபோர்டின் மகன் எட்செல் ஃபோர்டு, ஒருவார உழைப்பிற்குப்பின் ஒரு மனிதன் தன்னைப் புதுப்பித்துக்கொள்ள ஒரு நாள் போதாது என்றார்! 1930களில் தொழிற் சங்கம் அமைப்பதை ஃபோர்டு நிறுவனம் எதிர்த்தது உள்ளிட்டவை தொழிலாளர்விரோத நடவடிக்கைகளாகச் சுட்டிக்காட்டப்பட்டாலும், தொழிலாளியின் அளவுக்குமீறிய உழைப்பு நிறுவனத்திற்கு நல்லதல்ல, தொழிலாளியின் பொருளாதார நலனைப் பேணுவதே நிறு வனத்தின் நலனுக்கு உகந்தது என்ற ஃபோர்டின் அணுகுமுறை நினைவு கூரத்தக்கதே!

;