tamilnadu

img

பாமாயில் ஒதுக்கீடுக்கு அரசாணை வெளியீடு...

சென்னை:
பொது விநியோகத் திட்டத்தின் கீழ் நியாயவிலை கடைகளில் மாதம் ஒன்றுக்கு குடும்ப அட்டை தாரர்களுக்கு பாமாயில் வழங்க 15 ஆயிரத்து 600 கிலோ லிட்டர் தேவைப்படுகிறது.

நியாய விலை கடைகளில் மாத இறுதி நாட்களில் பாமாயில் கிடைப்பதில்லை என பொதுமக்களிடமிருந்து அதிக புகார்கள் வந்ததை அடுத்து ஒரு லிட்டர் பாமாயில் 25 ரூபாய்க்கு வழங்க பாமாயில் பாக்கெட்டுகள் கொள்முதல் செய்ய 47 கோடி ரூபாய் கூடுதல் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.அக்டோபர் மாதம் முதல் அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதம் வரை தங்குதடையின்றி அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கு பாமாயில் வழங்கப்பட உள்ளது.முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியின் உத்தரவின் பேரில் பொது விநியோகத் திட்டத்தில் அனைத்து குடும்ப அட்டைதாரர் களுக்கு பாமாயில் கிடைக்கிறதா என்பதை துறை அதிகாரிகள் அவ்வப்போது ஆய்வு செய்து உறுதிப்படுத்த வேண்டும் என்று அரசாணையில் குறிப்பிடப்பட்டுள்ளது.