அரியலூர் அருகே விரகாலூர் கிராமத்தில் நாட்டுப் பட்டாசுகள் தயாரித்தபோது திடீரென ஏற்பட்ட வெடி விபத்தில் 7 பேர் உயிரிழந்தனர்.
தீபாவளி பண்டிகை நெருங்கிவரும் நிலையில், பல பகுதிகளில் பட்டாசுகள் தயாரிக்கும் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
உரிய பாதுகாப்புடன் பட்டாசுகள் தயாரிக்கப்பட்டு வந்தாலும், சில இடங்களில் எதிர்பாராதவிதமாக வெடி விபத்துக்கள் ஏற்படுகின்றன.
இந்த நிலையில், அரியலூர் மாவட்டம் கீழப்பழுவூர் அருகே விரகாலூர் கிராமத்தில் நாட்டுப் பட்டாசுகள் தயாரித்தபோது திடீரென வெடி விபத்து ஏற்பட்டு உள்ளது.
இந்த வெடி விபத்தில் படுகாயமடைந்த சிலர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், 7பேர் உயிரிழந்ததாக தகவல்.
தீயணைப்புத் துறையினர் தீயை அணைக்க போராடி வருகின்றனர். விபத்து குறித்து அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.