ஹூவாய் நிறுவனம், அமெரிக்க நிறுவனங்களுடன் வர்த்தகத்தை தொடரலாம் என அமெரிக்க அதிபர் டிரம்ப் தெரிவித்தார்.
முன்னதாக அமெரிக்க வர்த்தக சபை ஹூவாய் நிறுவனத்துடன் அமெரிக்க நிறுவனங்கள் வியாபாரம் செய்ய தடை விதித்தது. இதன் காரணமாக கடந்த ஒரு மாதத்தில் மட்டும் பல்வேறு அமெரிக்க நிறுவனங்கள் ஹுவாய் நிறுவனத்துடனான வர்த்தக ஒப்பந்தங்களை முறித்துக் கொள்ள வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டன.
இந்நிலையில், அமெரிக்க அதிபர் டிரம்ப் ஹூவாய் நிறுவனம், அமெரிக்க நிறுவனங்களிடம் இருந்து பொருட்களை வாங்கிக் கொள்ளலாம் என தெரிவித்திருக்கிறார். ஜப்பானில் நடைபெற்ற ஜி20 மாநாட்டின் செய்தியாளர் சந்திப்பு ஒன்றில் டிரம்ப் இந்த தகவலை தெரிவித்தார்.
ஜி20 மாநாட்டின் போது அமெரிக்க அதிபர் டிரம்ப் மற்றும் சீன அதிபர் ஜின் பிங் சந்தித்து வர்த்தக விவகாரம் பற்றிய பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். இருநாடுகளிடையேயான வர்த்தக விவகாரம் சர்வதேச பொருளாதாரத்தில் பாதிப்பை ஏற்படுத்தும் என்பதால், இருதரப்பும் இணைந்து பொருட்களை விற்பனை செய்வது பற்றி சாதகமான முடிவை எடுக்கப்பட்டது.