states

சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் நம்பிக்கை “கருத்துக் கணிப்புகள் பொருட்டில்லை; நாங்கள்தான் ஆட்சிக்கு வருவோம்..!”

லக்னோ, மார்ச் 8 - உத்தரப் பிரதேச சட்டப்பேர வைத் தேர்தல் தொடர்பாக ஊட கங்களில் வெளியாகும் கணிப்பு களைப் பொருட்படுத்த வேண்டிய தில்லை என்று சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் கூறியுள்ளார். சமாஜ்வாதி கூட்டணிதான் ஆட்சிக்கு வரும் என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்துள்ளார். 403 தொகுதிகளைக் கொண்ட உத்தரப்பிரதேச மாநிலத்தில் பெரும் பான்மையைப் பெற 202 இடங்க ளில் வெற்றி பெற வேண்டும். இதில் ஆளும் கட்சியான பாஜக 242 இடங்களில் வெற்றி பெற்று மீண்டும் ஆட்சி அமைக்கும் என்றும், காங்கி ரஸ் 4 இடங்களிலும், பாஜகவுக்கு அடுத்ததாக அதிகபட்சமாக 143 இடங்களில் சமாஜ்வாதி கட்சியும், பகுஜன் சமாஜ் கட்சி 11 இடங்களி லும் வெற்றி பெறும் என்று கருத்துக் கணிப்பு முடிவுகள் தெரிவிக்கின்றன. இந்நிலையில்தான், சமாஜ் வாதி கட்சியின் தலைவர் அகிலேஷ் பேட்டி ஒன்றை அளித்துள்ளார்.  அதில், “கருத்துக்கணிப்பில் அவர் களுக்கு  கிடைத்ததை காட்டிலும்,  உத்தரப் பிரதேசத்தில் பெரும் பான்மையுடன் நாங்கள்தான் வெற்றி பெறுவோம். 300 இடங்க ளுக்கு மேல் வெற்றி பெற்று சமாஜ்  வாதி தலைமையிலான கூட்டணி ஆட்சி அமைக்கும்”என்று குறிப் பிட்டுள்ளார்.