states

img

நிஜ துப்பாக்கியால் சுட்டு தீபாவளி கொண்டாட்டம்... உ.பி. பாஜக தலைவர் அடாவடி

லக்னோ:
காற்று மாசுபாடு காரணங்களுக் காக தில்லி, ராஜஸ்தான் மற்றும் பீகார்மாநிலங்களில் தீபாவளிக்கு பட்டாசுகள் வெடிக்கத் தடை விதிக்கப்பட்டிருந்தது. ஆனால், சாமியாரான ஆதித்யநாத் முதல்வராக இருக்கும் உத்தரப்பிரதேசத்தில் மட்டும் எந்தவித கட்டுப்பாடுகளும் இல்லாமல் பட்டாசுகள் வெடிப்பதற்கு அனுமதி அளிக்கப்பட்டது.இந்நிலையில், தீபாவளிக்கு அம்மாநில பாஜக தலைவர் ஒருவர் பட்டாசுகளுக்குப் பதிலாக நிஜமான துப்பாக்கியால் சுட்டு, வானிலிருந்து குண்டுமழையைப் பொழியச் செய்திருப்பது, தற் போது தெரியவந்துள்ளது.

சஹரான்பூர் மாவட்ட பாஜக பொறுப்பாளராகவும், செய்தித் தொடர்பாளருமாக இருப்பவர் நிதின் குப்தா.இவர்தான், நவம்பர் 15 அன்று தன்வீட்டுமாடியில் நின்று துப்பாக்கியால் சுட்டுகுண்டுமழை பொழிந்துள்ளார். இதனைவீடியோ எடுத்து துணிச்சலாக சமூகவலைத்தளங்களிலும் வெளியிட்டுள் ளார்.இதற்கு அப்போதே கடும் கண்டனங்கள் எழுந்துள்ளன. நிதின் குப்தாமீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பலரும் கோரிக்கை விடுத்துள்ளனர். ஆனால், 10 நாட்களுக்கும் மேலாகநிதின் மீது நடவடிக்கை எடுக்காத பாஜகஅரசு, தற்போது வேறு வழியின்றி, வழக்கு பதிவு செய்துள்ளது. நிதின் குப்தாவின் துப்பாக்கி உரிமத்தையும் ரத்து செய்துள்ளது.

;