மக்களவை தேர்தலுக் கான 195 பேர் கொண்ட முதற்கட்ட வேட்பாளர் பட்டியலை பாஜக சனியன்று வெளியிட்ட நிலையில், முதற் கட்ட வேட்பாளர் பட்டியலுக்கே பாஜக ஆட்டம் கண்டு வருகிறது.
சீட் வழங்குவதாக அறி வித்த நாளில் ஜார்க்கண்ட் பிரி வின் மூத்த பாஜக தலைவரும் எம்பியுமான ஜெயந்த் சின்ஹா, இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரரும் கிழக்கு தில்லி எம்பியுமான கவுதம் கம்பீர் ஆகி யோர் பாஜகவில் இருந்து ஓட்டம் பிடித்தனர்.
சீட் கொடுக்காததை கண் டித்து ஒன்றிய முன்னாள் அமைச்சர் ஹர்ஷ வர்தன் பாஜக வில் இருந்து ஞாயிறன்று விலகி னார். போட்டியிட சீட் வழங்கி யும் குஜராத் முன்னாள் துணை முதல்வர் நிதின் பட்டேல், போஜ் புரி நடிகர் பவன் சிங் ஆகியோர் தங்களுக்கு சீட் வேண்டாம் என ஞாயிறன்று ஒதுங்கினர்.
இந்நிலையில், உத்தரப்பிர தேச மாநிலத்தின் முக்கிய பாஜக தலைவர்களில் ஒருவரும் எம்பி யுமான உபேந்திர சிங் ராவத் திற்கு மீண்டும் பாரபங்கி மக்க ளவை தொகுதியில் போட்டியிட பாஜக சீட் வழங்கியது. வேட்பா ளர் பட்டியலில் உபேந்திர சிங் பெயர் வெளியான அடுத்த 24 மணிநேரத்தில், பெண்கள் தொடர்பான விஷயத்தில் மோச மானவர் என்று கூறி உபேந்திர சிங்கின் ஆபாச வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியா னது. அடுத்த 6 மணிநேரங்களில் இந்திய அளவில் வீடியோ வைரலாக திங்களன்று மக்க ளவை தேர்தலில் இருந்து விலகு வதாக உபேந்திர சிங் ஓட்டம் பிடித்துள்ளார்.
195இல் ஒரே ஒரு முஸ்லிம் வேட்பாளர்
வகுப்புவாத அரசியலில் வேரூன்றி நிற்கும் பாஜக மக்க ளவை தேர்தலுக்கான முதற்கட்ட வேட்பாளர் பட்டியலை சனியன்று வெளியிட்டது. 195 பேர் கொண்ட இந்த வேட்பாளர் பட்டியலில் 194 பேர் இந்துக்கள். கேரள மாநிலம் மலப்புரம் தொகுதி வேட்பாளர் அப்துல் அஸ்லாம் ஒருவர் மட்டுமே முஸ்லிம். அதுவும் மலப்புரம் முஸ்லிம்கள் நிறைந்துள்ள பகுதி என்பதாலேயே அப்துல் அஸ்லாமிற்கு சீட் வழங்கப்பட்டுள் ளது என்பது குறிப்பிடத்தக்கது.