states

ஆதித்யநாத் பதவியேற்பு

லக்னோ, மார்ச் 25 - உத்தரப் பிரதேச முதல்வராக ஆதித்யநாத் தொடர்ந்து 2-வது முறையாக, வெள்ளியன்று பதவியேற்றுக்கொண்டார்.  அவருடன்  கேசவ் பிரசாத் மவுரியா, பிரஜேஷ் பதக் ஆகியோர்  துணைமுதல்வர்களாக பதவியேற்றுக் கொண்டனர். கடந்த முறை துணை முதல்வராக இருந்த தினேஷ் சர்மாவுக்கு இந்த முறை வாய்ப்பு வழங்கப்படவில்லை.  அதேநேரம், தான் போட்டியிட்ட தொகுதியில் தோற்றுப்போன கேசவ் பிரசாத் மவுரியாவுக்கு மீண்டும் துணைமுதல்வர் பதவி வழங்கப்பட்டுள்ளது. பதவியேற்பு விழாவில், பிரதமர் மோடி, உள்துறை துறை அமைச்சர் அமித்ஷா, மத்திய அமைச்சர்கள் ராஜ்நாத் சிங், பாஜக தேசியத் தலைவர் நட்டா உள்பட பலர் கலந்து கொண்டனர்.