states

img

சேட்டிலைட் மூலம் இணைய சேவையை வழங்கப்போகும் ஜியோ  

ரிலையன்ஸ் நிறுவனமானது சேட்டிலைட் மூலம் இணைய சேவையை வழங்க தயாராகி வருகிறது.  

ரிலையன்ஸ் இன்டஸ்ட்ரீஸின் ஜியோ ப்ளாட்ஃபார்ம் நிறுவனமும், எஸ்.ஈ.எஸ் எனப்படும் செயற்கைக்கோள் மூலம் சேவைகளை வழங்கும் நிறுவனமும் ஒன்றிணைந்து நிறுவனம் ஒன்றை தொடங்கியுள்ளது. இந்த நிறுவனத்தின் மூலம் செயற்கைக்கோள் மூலம் இணையவசதி சேவையை வழங்க உள்ளனர்.  

இந்த நிறுவனத்தின் பங்குகளில் ஜியோ நிறுவனம் 51 சதவீத பங்குகளையும், எஸ்.ஈ.எஸ் நிறுவனம் 49 சதவீத பங்குகளையும் தக்கவைத்துக்கொள்ளும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.  

இதுகுறித்து ஜியோ நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில், தொலைத்தொடர்பு சேவைக்காக விண்வெளியில் இடைப்பட்ட பூமியின் சுற்று வட்டப்பாதையையும், பூமிக்கு இணையான சுற்று வட்டப்பாதையையும் பயன்படுத்த உள்ளது.  

அதன்மூலம் இணைய சேவையை நிறுவனங்களுக்கும், மொபைல் போனுக்கும், இந்தியா மட்டுமின்றி மற்ற அண்டைய நாடுகளுக்கும் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.  இந்த இணைய சேவையானது எஸ்.ஈ.எஸ் செயற்கைக்கோள் டேட்டா மற்றும் கனெக்டிவிட்டி சேவைகளை இந்தியாவிற்கு வழங்குவதற்கு ஒரு கருவியாக இருக்கும் எனவும் கூறப்பட்டுள்ளது.

;