states

img

ஹிண்டன்பர்க் அறிக்கையால் வெளிநாட்டு வங்கிகள் கடன் தர மறுப்பு

மோடி பிரதமர் ஆவ தற்கு முன்பு உலகப்பணக்காரர் களின் பட்டியலில் 600ஆவது இடத்திற்கு மேல் இருந்த கவுதம் அதானி, மோடி பிரதமர் ஆன பின்பு உலகப்பணக்காரர்களின் பட்டிய லில் டாப் 3இல் காலடி வைத்தார். துறைமுகம், நிலக்கரி சுரங்கம், வரி தள்ளுபடி போன்றவற்றில் கட்டுப் பாடின்றி மோடி அரசு ஆதரவு வழங்கியதே அதானியின் இந்த அசுர வளர்ச்சிக்கு காரணமாக இருந்தது. குறிப்பாக 2022இல் மோடி அரசின் இதே ஆதரவு மூலம் அதானி விரைவில் உலகின் முதன்மையான பணக்காரராக உருவெடுப்பார் என தகவல் வெளி யாகியது. 

ஆனால் கடந்த 2023 ஜனவரி யில் அதானி பங்குச்சந்தை முதலீடு மூலமாகவும், போலியான நிறுவ னங்கள் மூலமாகவும் பல்வேறு முறைகேடுகளை அரங்கேற்றி வரு வதாக அமெரிக்காவைச் சேர்ந்த பங்குச்சந்தை ஆய்வு நிறுவனமான ஹிண்டன்பர்க் அறிக்கை வெளி யிட்டது. ஹிண்டன்பர்க் அறிக்கை க்குப் பின்னர் அதானி பலத்த சரி வைச் சந்தித்தார். இந்திய சந்தைக ளில் அதானியின் நிறுவனங்களின் பங்குகள் ஆட்டம் கண்டன. குறிப் பாக போர்ப்ஸ் உலகப்பணக்காரர்க ளின் பட்டியலில் 3ஆவது இடத்தில் இருந்த அதானி ஹிண்டன்பர்க் அறிக்கைக்குப் பிறகு 25ஆவது இடத்திற்கு தள்ளப்பட்டார். பல ஆயிரம் கோடிகளை இழந்த அதானி, மோடி அரசின் மறை முக ஆதரவால் உள்நாடு, ஆஸ்தி ரேலியா, வங்கதேசம் ஆகிய நாடுக ளில் நிலக்கரி - மின்சாரங்களை விற்பனை செய்து மீண்டும் உலகப் பணக்காரர்களின் பட்டியலில் மேல்நோக்கி பயணிக்க ஆரம்பித் தார். 

இந்நிலையில், ஹிண்டன்பர்க் அறிக்கைக்கு பிறகு ஏற்பட்ட சரிவைச் சரி செய்ய வெளிநாட்டு வங்கிகளிடம் கடன் கேட்டார். ஆனால் வெளிநாட்டு வங்கிகள் ஹிண்டன்பர்க் அறிக்கையை காரணம் காட்டி கடன் கொடுக்க மறுத்துவிட்டதாக தகவல் வெளி யாகியுள்ள நிலையில், தற்போது அதானி உள்நாட்டிலேயே கடன் வாங்கும் முகாமை துவங்கி விட்டார்.

அதானி நிறுவனத்தின் ஒட்டு மொத்த கடன் மதிப்பு ரூ.2,41,394 கோ டியாக உள்ள (ரூ. 2.72 லட்சம் கோடி என்ற மற்றொரு தகவலும் உள்ளது) நிலையில், ஹிண்டன் பர்க் அறிக்கை வெளியான பின்பு  ஒரே ஆண்டில் இந்திய அரசு மற்றும் தனியார் வங்கிகள், நிதி நிறுவனங் கள் அதானி குழுமத்திற்கு சுமார் ரூ.17,887 கோடி அளவில் கடன் வழங்கியுள்ளது தற்போது வெளிச் சத்திற்கு வந்துள்ளது. கடந்த மார்ச் 31 (2024) நிலவரப்படி இந்திய வங்கிகள் அதானி குழுமத்திற்கு மொத்தம் ரூ.88,100 கோடி கடன் வழங்கியுள்ளன. மார்ச் 31, 2023 முடிவின் தரவுகளைப் பார்க்கும் போது இந்திய வங்கிகள் வழங்கிய கடன் தொகைகள் ரூ.70,213 கோடி இருந்த நிலையில், அதன்படி ஒரே வருடத்தில் அதானி ரூ.17,887 கோடி அளவில் இந்திய வங்கிகளில் கடனை வாங்கிக் குவித்துள்ளது நிரூபணமாகியுள்ளது. இந்திய வங்கிகளின் கடன் தொகை அதானி யின் மொத்தக் கடனில் 36% என்ற  நிலையில், ஒரு வருடத்தில் இந்திய வங்கிகளிடம் தனது மொத்தக் கடன் தொகை மதிப்பீட்டில் 5% வரை கடன் வாங்கியுள்ளார்.

அதானிக்கு பாரத் ஸ்டேட் வங்கி, பாங்க் ஆப் பரோடா, யூனி யன் வங்கி, கனரா வங்கி போன்ற அரசின் வங்கிகள் மற்றும் ஐசிஐசிஐ, ஹெச்டிஎப்சி, ஆக்சிஸ் போன்ற தனியார் வங்கிகள் கடன் களை வாரி வழங்கியுள்ளன.