பெங்களூரு, பிப்.6- முஸ்லிம் சமூகத்தைச் சேர்ந்த பெண்களின் கல்விக்குக் கேடு விளைவிக்கும் வகையில் கட ந்த சில நாட்களாக அரசியல் நடக் கிறது என கர்நாடக முன்னாள் முதல்வரும் மதச்சார்பற்ற ஜனதா தள தலைவருமான எச்.டி.குமார சாமி, முதல்வர் பசவாரஜ் பொம் மையை கடுமையாகசாடியுள்ளார். பெங்களூருவில் செய்தியா ளர்களுக்குப் பேட்டி அளித்த குமா ரசாமி, “முஸ்லிம் சமூகத்தைச் சேர்ந்த பெண்களின் கல்விக்குக் கேடு விளைவிக்கும் வகையில் கடந்த சில நாட்களாக அரசியல் நடக்கிறது. ‘பேட்டி பதாவோ’ என்பதற்குப் பதிலாக, ‘பேட்டி ஹட்டாவோ’ (பெண் குழந்தை களை ஒதுக்கித் தள்ளுங்கள்) என, பா.ஜ,வின் கருத்து மாறியுள்ளது. வாக்குகள் பெறுவதற்காகவே இந்த நிலைபாட்டை பாஜக மேற்கொண்டுள்ளது. முதல்வராக இருக்கும் பசவராஜ் பொம்மை க்கு அவரது மந்திரிகள் மீதே கட்டுப் பாடு இல்லை. பள்ளி களில் ஹிஜாப் அணிவிதில் புதிய விதி முறைகளைப் புகுத்தவேண்டாம். இத்தகைய கெடுபிடிகளால் பெண் பிள்ளைகளின் கல்வி பாதிக்கப்படும்’’ எனத் தெரிவித் துள்ளார்.