states

img

எல்ஐசி பங்கு விற்பனை முடிவை ஒன்றிய அரசு கைவிட வேண்டும் - சு.வெங்கடேசன் எம்பி வலியுறுத்தல்

எல்ஐசியின் பங்குகளை தனி யாருக்கு விற்பனை செய்யும் முடிவை ஒன்றிய அரசு கைவிட வேண்டும் என்று சு.வெங்கடேசன் எம்பி வலியுறுத்தி உள்ளார்.

ஆயுள் காப்பீட்டு நிறுவனங்கள் 1956ம் ஆண்டு ஜனவரி19 அன்று தேசியமயமாக்கப்பட்டது. இந்நிலையில்  2021- 22  நிதியாண்டுக்கான பட்ஜெட்டில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் எல்ஐசி நிறுவனத்தின் பங்குகள் சந்தையில் விற்பனை செய்யப்படும். இதற்கான சட்டத்திருத்தங்கள் கொண்டுவரப்படும்”  அதுமட்டுமல்லாமல் காப்பீட்டுத் துறையில் அந்நிய முதலீடு 49 சதவீதம் வரை இருந்த நிலையில், அதை 74 சதவீதமாகவும் உயர்த்தி பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டது.

இந்நிலையில் ஆயுள் இன்சூரன்ஸ் தேசியமய நாளையொட்டி தேசம் பொருளாதார வெயிலில் வியர்த்து திணறும் போது அடர்ந்த நிழலைத் தந்து ஆசுவாசப்படுத்துகிற எல்.ஐ.சி என்ற ஆலமரத்தின் விதை துளிர்விட்ட நாள்.
ஒன்றிய அரசே ! வேர்களில் வெந்நீர் ஊற்றாதே. எல்.ஐ.சி பங்கு விற்பனை முடிவைக் கைவிடு! என சு.வெங்கடேசன் எம்.பி வலியுறுத்தி உள்ளார்.

 

;