states

img

இந்தியாவில் இருந்து இறக்குமதியாகும் கோதுமையை மறு ஏற்றுமதி செய்ய ஐக்கிய அரபு அமீரகம் தடை 

இந்தியாவில் இருந்து இறக்குமதியாகும் கோதுமை மற்றும் கோதுமை மாவை ஏற்றுமதி செய்ய தடை விதித்து ஐக்கிய அரபு அமீரகத்தின் பொருளாதார அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.
ரஷியா-உக்ரைன் போர் சூழலில், அமீரகத்துக்கு ரஷியாவில் இருந்து கோதுமை இறக்குமதி செய்வது தடைபட்டது. இந்த நிலையில், கோதுமை இறக்குமதிக்கு ரஷியாவிற்கு பதிலாக ஐக்கிய அரபு அமீரகம் இந்தியாவை நாடியது.
இந்நிலையில் மே 13 அன்று கோதுமை ஏற்றுமதிக்கு இந்தியா தடை விதித்ததை தொடர்ந்து, ஐக்கிய அரபு எமிரேட்ஸ் உட்பட இந்தோனேசியா, ஓமன், பங்களாதேஷ் மற்றும் ஏமன் ஆகிய 5 நாடுகள் தூதரக வழிகளில் இந்திய அரசிடம் கோதுமையை ஏற்றுமதி செய்யுமாறு கோரிக்கையை முன்வைத்தன. இருப்பினும், அத்தகைய கோரிக்கைகளை மதிப்பீடு செய்ய ஒன்றிய அரசாங்கத்தால் அமைக்கப்பட்ட குழு இன்னும் முடிவு எதுவும் எடுக்கவில்லை.
இந்நிலையில் இந்தியாவில் இருந்து இறக்குமதியாகும் கோதுமை மற்றும் கோதுமை மாவை ஏற்றுமதி செய்ய தடை விதித்து ஐக்கிய அரபு அமீரகத்தின் பொருளாதார அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.
மேலும் வர்த்தக ஓட்டத்தை பாதித்துள்ள சர்வதேச சூழ்நிலைகளைக் கருத்தில் கொண்டு, இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு பொருளாதார அமைச்சகம் விளக்கமளித்துள்ளது.