states

img

முதுகலை மருத்துவ படிப்புகளுக்கான நீட் தேர்வு ஒத்திவைப்பு 

எம்.டி. எம்.எஸ் உள்ளிட்ட முதுகலை மருத்துவ படிப்புகளுக்கான நீட் தேர்வை ஒன்றிய சுகாதாரத்துறை அமைச்சகம் ஒத்திவைத்து உள்ளது.
முதுகலை மருத்துவ படிப்புகளுக்கான நீட் தேர்வு வரும் மார்ச் 12ஆம் தேதி நடைபெற இருந்த நிலையில் எட்டு வாரங்கள் வரையில் தேர்வை ஒத்தி வைப்பதாக ஒன்றிய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. கடந்த  2021ஆம் ஆண்டுக்கான முதுநிலை நீட் தேர்வு கலந்தாய்வு நடப்பதால் நீட் தேர்வு ஒத்திவைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது