states

img

நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் : 2 நாட்களுக்கு கேள்வி நேரம் ரத்து

நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரின் முதல் இரண்டு நாட்கள் கேள்வி நேரம் மற்றும் உடனடி கேள்வி நேரம் ரத்து செய்யப்படுவதாக  அறிவிக்கப்பட்டுள்ளது. 
நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் குடியரசுத் தலைவர் உரையுடன் வரும் 31-ம் தேதி துவங்க உள்ளது. இதையடுத்து ஒன்றிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பிப்ரவரி 1ஆம் தேதி ஒன்றிய பட்ஜெட்டை தாக்கல் செய்ய உள்ளார்.
இந்த நிலையில் ஜனவரி 31 மற்றும் பிப்ரவரி 1 ஆகிய தேதிகளில் உடனடிக் கேள்வி நேரம் இருக்காது என நாடாளுமன்ற செய்திக் குறிப்பில் அறிவிப்பு வெளியாகியுள்ளது. மேலும், உடனடிக் கேள்வி நேரத்தில் எழுப்பும் விவகாரங்கள் பிப்ரவரி 2-ம் தேதி முதல் எடுத்துக்கொள்ளப்படும் என்றும், இதுகுறித்த அறிவிப்பை முன்கூட்டியே பிப்ரவரி 1-ம் தேதி காலை 10 மணி முதல் மாலை 6 மணிக்குள் இணையவழியாகவோ நேரடியாகவோ குறிப்பிட வேண்டும் என்றும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.