states

img

தில்லியில் திமுக அலுவலகம் திறப்பு சோனியா காந்தி, சீதாராம் யெச்சூரி உள்ளிட்டோர் பங்கேற்பு

புதுதில்லி,ஏப்.3- தலைநர் தில்லியில் பொதுமக்கள் பயன்படுத்தும் வகையில் பிரமாண்ட நூலகம், எம்.பி.க்கள், கட்சி நிர்வாகிகள்  தங்குவதற்கான அறைகள் என விசால மான வசதிகளுடன் திமுக அலு வலக கட்டிடம் கட்டப்பட்டுள்ளது. கடந்த 2006 ஆம் ஆண்டு மக்களவை  இரு அவைகளிலும் 7 எம்.பி.க்களை கொண்ட கட்சிக்கு தில்லி யில் அலுவல கம் அமைக்க இடம் ஒதுக்க ஒன்றிய அரசு  முடிவெடுத்தது. இதன் அடிப்படையில் எம்பிக்கள் எண்ணிக்கைக்கு ஏற்ப 500 சதுர மீட்டர் முதல் 4 ஏக்கர் வரை நிலம் ஒதுக்க உத்தரவிடப்பட்டது. அந்த வகையில், 2013-இல் திமுகவுக்கு, தில்லி யிலுள்ள தீன்தயாள் உபாத்யாயா மார்க்  பகுதியில் நிலம் வழங்கப்பட்டது. பின்னர், இங்கு திமுக அலுவலக மான அண்ணா - கலைஞர் அறிவாலயம் மொத்தமாக 8 ஆயிரம் சதுரஅடியில் 3  தளங்களுடன் கட்டப்பட்டுள்ளது. உயர மான 4 தூண்களை கொண்ட முகப்பு,  நுழைவாயிலில் அண்ணா-கலைஞர்  இருவரது மார்பளவு சிலைகள், அறை கள், பொதுமக்கள் பயன்படுத்தும் வகை யில் பிரமாண்ட நூலகம் என விசாலமான  வசதிகளுடன் கட்டிடம் கட்டப்பட்டுள் ளது. இந்த கட்டிடத்துக்கு அண்ணா-கலைஞர் அறிவாலயம் என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது. இந்த அறிவாலய கட்டிட திறப்பு விழா சனிக்கிழமை(ஏப்.2) மாலை 6 மணிக்கு நடைபெற்றது. விழாவுக்கு கட்சியின் பொதுச் செயலாளரான அமைச்சர் துரைமுருகன் தலைமை தாங்கி னார். இந்த கட்டிடத்தின் தரைத்தளத் தில் அமைந்துள்ள முரசொலி மாறன் அரங் கத்தை முதல்வர் மு.க. ஸ்டாலின் திறந்து  வைத்தார். இந்த விழாவை காங். தலை வர் சோனியா காந்தி, மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி பொதுச் செய லாளர் சீதாராம் யெச்சூரி, இந்திய கம்யூ னிஸ்ட் கட்சி பொதுச் செயலாளர் டி.ராஜா,  ஃபரூக் அப்துல்லா ஆகியோர் குத்து விளக்கு ஏற்றி தொடங்கி வைத்தனர். விழாவில், அகிலேஷ் யாதவ், அமர் பட்நாயக், ப.சிதம்பரம், ஆதிர் ரஞ்சன் சவுத்ரி, வைகோ, திருமாவளவன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். இந்த விழாவில் “கருணாநிதி ஏ  லைப்” என்ற புத்தகத்தை இந்து என்.ராம்  வெளியிட காங்கிரஸ் தலை வர் சோனியா காந்தி பெற்றுக் கொண்டார். “ஏ  திராவிடன் பயணம்” என்ற புத்தகத்தை  முதல்வர் ஸ்டாலின் வெளியிட அமைச்சர் துரைமுருகன் பெற்றுக் கொண்டார்.

;