states

img

புனித பேட்ரிக் பள்ளியில் மாணவர் தின விழா

புதுச்சேரி, ஜூலை 20- புனித பேட்ரிக் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் காமராஜரின் 120-வது பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது. புதுச்சேரி சாரதாம்பாள் நகரில் உள்ள புனித மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி யின் நிறுவனர் ரெஜிஸ் வெள்ளி விழா கட்டிடத்தில் காமராஜர் பிறந்த நாள் விழா மற்றும் மாணவர்கள் தின விழா நடைபெற்றது. இதையொட்டி பேச்சுப் போட்டி மற்றும் கவியரங்கம் நடத்தப் பட்டது. புதுச்சேரி பல்கலைக்கழக பேரா சிரியை லட்சுமிதத் நடுவராக பங்கேற்றார். பல்வேறு போட்டிகளிலும் வெற்றி பெற்ற மாணவர்களுக்கும் பரிசுகளும் வழங்கப்பட்டன. சிறப்பு விருந்தினருக்கு பள்ளியின் தாளாளர் பிரடெரிக் ரெஜிஸ் நினைவு பரிசுகளை வழங்கினார். பள்ளியின் மருத்துவ இயக்குநர் ஜீட்டா பிரடெரிக், பள்ளி முதல்வர் அல்போன்ஸ் ஹில்டா, ஆசிரியர்கள் உட்பட திரளான மாணவர்கள் கலந்து கொண்டனர். இந்த விழாவை மாணவி வெண்மதி தொகுத்து வழங்கினார். மாணவர் கதிரவன், மாணவர் தின உறுதிமொழியை வாசித்தார். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை தமிழ்த்துறை ஆசிரியர்கள் செய்திருந்தனர்.