states

வேலைவாய்ப்பில் பழைய இடஒதுக்கீட்டு முறையை பின்பற்றுக புதுச்சேரி அரசுக்கு சிபிஎம் வலியுறுத்தல்

புதுச்சேரி, நவ. 5- வேலைவாய்ப்பில் பழைய இட ஒதுக்கீட்டு முறையை பின்பற்ற வேண்டும் என்று புதுச்சேரி அரசை மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது. இதுகுறித்து கட்சியின் மாநிலச் செயலாளர் ஆர்.ராஜாங்கம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: புதுச்சேரி மாநிலத்தில் கடந்த 10 ஆண்டுகளில் 10,501 அரசு பணி யிடங்கள் காலியாக உள்ளன. நடப்பு நிதி யாண்டிற்குள் கணிசமான அரசு ஊழியர்கள் ஓய்வு பெரும் நிலை உள்ளது. இந்தப் பின்ன ணியில் 1,060 அரசு பணியிடங்கள் மட்டும் தற்போது நிரப்புவதற்கு அரசாணை பிறப்பித்திருப்பது நியாயமற்றது என்றா லும், நிரப்பப்பட உள்ள அரசு பணியிடங் களில் நடப்பில் உள்ள இட ஒதுக்கீட்டு கொள்கைக்கு எதிராக, அரசியலமைப்பு சட்ட த்திற்கு விரோதமாகவும் பொருளாதார ரீதி யாக பின்தங்கிய பிரிவினருக்கு 10 விழுக்காடு இட ஒதுக்கீடு அறிவித்துள்ளதை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கடுமையாக எதிர்க்கிறது. அரசியல் அமைப்புச் சட்டம் 50 விழுக் காடு வரை இட ஒதுக்கீடு வழங்கியுள்ளது. உச்ச நீதிமன்றத்தில் பொருளாதார ரீதியான பின்தங்கிய பிரிவினருக்கான இட ஒதுக்கீடு குறித்து வழக்கு நிலுவையில் உள்ளன. மேலும் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தி அதற்கு ஏற்ப இட ஒதுக்கீடு முறைப்படுத்த வேண்டும் என்ற மக்களின் எதிர்பார்ப்பை நடைமுறைப்படுத்தவில்லை. எனவே, புதுச்சேரி மாநிலத்தில் பொரு ளாதார ரீதியாக பின்தங்கிய முன்னேறிய சமூ கத்திற்கான இட ஒதுக்கீட்டு அறிவிப்பை அதுவரை ரத்து செய்ய வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

;