states

img

புதுச்சேரியில் எஸ்.சி விடுதிகளில் அசைவ உணவு நிறுத்தம் கேள்விக்குறியாகும் மாணவர்களின் ஊட்டச்சத்து!

புதுச்சேரி, நவ. 27- புதுச்சேரி ஆதிதிராவிடர் விடுதி களில் பயிலும் மாணவர்களுக்கு ஊட்டச்சத்துடன் கூடிய உணவு வழங்க வேண்டும் தீண்டாமை ஒழிப்பு முன்னணி வலியுறுத்தியுள்ளது. ஆதிதிராவிட மாணவ, மாணவி களுக்காக புதுச்சேரியில் 16, காரைக்காலில் 10, ஏனாமில் 2 என மொத்தம் 28 விடுதிகள் உள்ளன. ஏழ்மை நிலையிலுள்ள ஆதிதிராவிட மாண வர்கள் இந்த விடுதிகளில் தங்கி கல்வி பயில்கின்றனர். ஆனால், விடுதி களுக்காக ஒதுக்கப்படும் நிதி முறை யாக செலவிடப்படாததால், அவை மோசமாக இயங்கி வருவதாக மாணவர்கள் புகார் தெரிவிக்கின்றனர். விடுதியில் வழங்கப்பட்டு வந்த அசைவ உணவுகள் முற்றிலும் நிறுத்தப்பட்டுள்ளதாகவும், முட்டை கூட வழங்கப்படுவதில்லை என்றும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. கிருஷ்ணா நகரில் உள்ள மாணவி களுக்கான விடுதியில் இருந்து 2 கி.மீ. தூரத்தில் பேருந்து நிலை யம் உள்ளதால் அவர்களுக்கு வழங்கு வதற்காக நூற்றுக்கணக்கில் சைக்கிள் கள் அரசு சார்பில் வாங்கப்பட்டு உள்ளன. எனினும், இதுவரை யாருக்கும் சைக்கிள் வழங்கப்பட வில்லை என்றும், பூட்டி வைக்கப்பட்ட சைக்கிள்கள் வீணாகி வருவ தாகவும் மாணவிகள் வேதனை தெரி விக்கின்றனர். தாகூர் கலைக்கல்லூரி அருகே உள்ள விடுதி பழுதடைந்ததை அடுத்து அதனை சீரமைக்க 40 லட்ச ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளதாகவும், எனினும் பணிகள் தொடங்கப்படாததால் கொசப் பாளையம் வரை வந்து செல்ல வேண்டிய நிலையில் மாணவர்கள் உள்ளதாகவும் கூறப்படுகிறது.

தட்டாஞ்சாவடியில் உள்ள விடுதியில் கட்டிடம் விரிசல் அடைந்துள்ளதாக அதிகாரிகளிடம் மாணவர்கள் தரப்பில் பலமுறை தெரிவித்தும் இது வரை எந்த நடவடிக்கையும் எடுக்க வில்லை என்று வேதனை தெரி விக்கின்றனர். இதுகுறித்து தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் செயலாளர் இரா.சர வணன் கூறுகையில், புதுச்சேரி மாநிலத்தில் ஆதிதிராவிட மற்றும் பழங்குடியின மாணவர்களுக்கு ஆரம்ப கல்வி முதல் ஆராய்ச்சி கல்வி வரை அனைத்து மாணவர்க ளுக்கும் எந்த தனியார் நிறுவனத்தில் பிடித்தாலும் அதற்கான முழு செலவை அரசே ஏற்கும் என்று என்.ஆர் காங்கிரஸ், பாஜக கூட்டணி அரசு கூறுகிறது. ஆனால், ஏழை ஆதி திராவிட மாணவர்கள் மீது ஒரு துளி கூட அக்கறை இல்லாத அரசாகத்  தான் உள்ளது. புதுச்சேரி ஆதிதிராவிடர் நலத் துறையின் கீழ் இயங்கி வரும் ஆதி திராவிடர் மாணவர்களுக்கான தங்கும் விடுதிகளில் கடந்த மூன்று ஆண்டு களாக அசைவ உணவு நிறுத்தப் பட்டுள்ளது. இதற்கு முன்பு திங்கட் கிழமைகளில் முட்டையும், புதன்கிழமை ஆட்டுக்கறியும், வியாழக்கிழமை மீனும், சனிக்கிழமை கோழிக்கறியும் மாணவர்களுக்கு வழங்கப்படுவது வழக்கமாக இருந்தது. ஆனால் கடந்த மூன்று ஆண்டு காலமாக ஒரு முட்டை கூட வழங்கப்படுவதில்லை. நம் நாட்டில் குழந்தைகள் மற்றும் வளர் இளம் பெண்களிடையே (11 முதல் 19 வயது வரை) 60 விழுக்காட்டிற்கும் மேற்பட்டோர் ரத்தச் சோகை நோயால் பாதிக்கப் பட்டுள்ளனர்.

80 விழுக்காடு தாய்மார்க ளும், பெண்களும் ரத்த சோகை யால் பாதிக்கப்பட்டுள்ளனர். 5 வயதுக்குட்பட்ட குழந்தைகளில் ஐந்தில் 3 பேர் ரத்தச் சோகையுடனே வளர்கின்றனர் என்று புள்ளிவிவரம் கூறு கிறது. இப்படிப்பட்ட நிலையில் விடுதி யில் தங்கும் ஏழை ஆதிதிராவிட மாணவ, மாணவிகளுக்கு வழங்கப் படும் அசைவ உணவு, அரசு நிறு வனம் மூலம் வழங்கப்பட்டு வந்தது. அதில் எந்த முறைகேடும் நடை பெறாத நிலையில், தனியாரிடம் ஒப்படைக்கப்பட்டது. பின்னர் அதில் முறையீடு புகார் எழுந்தது. இத னால், யாரிடம் டெண்டர் விடுவது என்பதில்தான் பிரச்சனை உள்ளது என்று மாநில நிர்வாகம் கூறியுள்ளது. மாணவர்கள் தங்கும் விடுதிகளில் கழிவறைகள் மோசமான நிலையில் உள்ளன. பல இடங்களில் தாழ்ப்பாள் கிடையாது. கடந்த மூன்று ஆண்டு காலமாக அனைத்து மாண வர்களுக்கும் வழங்கப்பட வேண்டிய இலவச பாய், தலையணை வழங்கப்படவில்லை. மேற்கூறிய கோரிக்கைகளை வலி யுறுத்தி தட்டாஞ்சாவடி ஆதி திரா விடர் நலத்துறை முன்பு வரும் 29ஆம் தேதி ஆர்ப்பாட்டம் நடத்த உள்ளோம் என்றும் சரவணன் கூறினார்.

;