states

img

நீட் தேர்வால் மருத்துவ கனவை பாஜக அரசு: கி.வீரமணி குற்றச்சாட்டு

புதுச்சேரி, ஏப். 12- மருத்துவராக வேண்டும் என்ற தமிழ்நாட்டு மாணவர்களின் கனவை நீட் தேர்வின் மூலம் ஒன்றிய பாஜக அரசு  சிதைத்து வருகிறது என்று திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி குற்றம் சாட்டினார். நீட் தேர்வு, தேசிய கல்விக்கொள்கை எதிர்ப்பு மாநில உரிமை மீட்பு பரப்புரை பயண பொதுக்கூட்டம் திங்களன்று (ஏப். 11) புதுச்சேரி சுதேசி பஞ்சாலை எதிரில் நடைபெற்றது. சிவ.வீரமணி தலைமை தாங்கிய இந்தக் கூட்டத்தில் திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி பேசுகையில், “ஒன்றிய பாஜக அரசு அரசியல் சட்டத்திற்கு எதிர் மறையாக செயல்படுகிறது”என்றார்.  நீட் தேர்வை கொண்டு வந்து மாணவர்க ளின் மருத்துவ கனவை சிதைத்த பாஜக அரசு, தேசிய கல்விக் கொள்கை மூலம் மீண்டும் குலதர்ம கல்வியை திணிக்கிறது என்றும் குற்றம் சாட்டினார். புதுச்சேரி முன்னாள் முதல்வர் நாராயண சாமி, திமுக மாநில அமைப்பாளர் சிவா, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பிரதேச செயலாளர் ஆர். ராஜாங்கம், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலர் சலீம், விசிக முதன்மை செயலர் தேவ.பொழிலன், மார்க்சிஸ்ட்- லெனினிஸ்ட் கட்சியின் மாநிலப் பொதுச்செயலாளர் பாலசுப்பிரமணியன் ஆகியோர்ரும் பேசினர்.

;