மகாத்மா காந்தியின் நினைவு தினத்தையொட்டி புதுச்சேரி அரசு சார்பில் கடற்கரையில் அமைந்துள்ள அவரது திருவுருவச்சிலைக்கு மரியாதை செலுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது. துணைநிலை ஆளுநர் டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன், முதல்வர் ரங்கசாமி, சட்டப்பேரவை தலைவர் செல்வம் மற்றும் அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள், இதில் கலந்து கொண்டனர்.
***
புதுச்சேரி சமூக நல்லிணக்க இயக்கத்தின் சார்பில் மகாத்மா காந்தியின் நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது. கடற்கரையில் அமைந்துள்ள அவரது திருவுருவச் சிலைக்கு நல்லிணக்கத்தின் ஒருங்கிணைப்பாளர்கள் ராமச்சந்திரன், கிருஷ்ணமூர்த்தி, அரசு ஊழியர் சங்கங்களின் சம்மேளன தலைவர்கள் பிரேமதாச ராதாகிருஷ்ணன், முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கத்தின் நிர்வாகிகள் ரவிச்சந்திரன், ராம்ஜி உள்ளிட்ட திரளானோர் மரியாதை செலுத்தினர்.
***