states

img

புதுச்சேரியில் தொழிலாளர்களுக்கு  இலவச கண்ணாடி

புதுச்சேரி,நவ.20- இந்தியா விஷன் இன்ஸ்டியூட் மற்றும் சிஐடியு புதுச்சேரி பிரதேச தனியார் போக்குவரத்து தொழிலாளர் சங்கம் இணைந்து நடத்திய இலவச கண் பரிசோதனை முகாமில் பரிசோதனை செய்து கொண்டவர்களுக்கு கண் கண்ணாடி வழங்கும் நிகழ்ச்சி மதகடிப்பட்டில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு, சிஐடியு தனியார் போக்குவரத்து தொழிலாளர் சங்கத்தின் பிரதேச செயலாளர் எம்.பி. மதிவாணன் தலைமை தாங்கினார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் ஆர்.ராஜாங்கம் கலந்து கொண்டு தொழிலாளர்களுக்கு இலவச கண்கண்ணாடிகளை வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் கட்சியின் மன்னாடிபட்டு கொம்யூன் செயலாளர் இரகு. அன்புமணி, அகில இந்திய விவசாயிகள் சங்கத்தின் புதுச்சேரி  செயலாளர் வே. சங்கர், அகில இந்திய வழக்கறிஞர்கள் சங்கத்தின் புதுச்சேரி பிரதேச பொருளாளர் தட்சிணாமூர்த்தி, தனியார் போக்குவரத்து தொழிலாளர் சங்கத்தின்  பொருளாளர் ராஜா ஆகியோர் கலந்து கொண்டனர்.