புதுச்சேரி, மே 9- அரசு ஊழியர் சங்கங்களின் சம்மேளன கவுரவத் தலைவரும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் புதுச்சேரி பிரதேச தலைவர்களில் ஒரு வருமான தோழர் சி.எச்.பாலமோக னனின் இறுதி நிகழ்ச்சி திங்களன்று (மே 9) புதுச்சேரியில் நடைபெற்றது. முதல்வர் அஞ்சலி புதுச்சேரி பேருந்து நிலையம் எதிரிலுள்ள அரசு ஊழியர் சம்மேளன அலுவலகத்தில் வைக்கப்பட்டிருந்த சி.எச்.பாலமோகனனின் உடலுக்கு புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமி மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார். , முன்னாள் முதல்வர் நாராயணசாமி, மக்களவை உறுப்பினர் வைத்தியலிங்கம், பொது பணித்துறை அமைச்சர் லட்சுமி நாராயணன், பேரவை துணைத் தலைவர் ராஜவேலு, திமுக மாநில அமைப்பாளரும், புதுச்சேரி எதிர்க்கட்சி தலைவருமான சிவா, அவைத் தலைவர் சிவக்குமார், அக் கட்சியின் சட்டமன்ற உறுப்பினர்கள் செந்தில், அனிபால் கென்னடி, சம்பத் வைத்தியநாதன் எம்எல்ஏ உள்ளிட்ட பலரும் அஞ்சலி செலுத்தினர். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யின் தமிழ்நாடு மாநில செயற்குழு உறுப்பினர் பி.செல்வசிங், மூத்தத் தலைவர்கள் சுதா சுந்தரராமன், பெருமாள், பிரதேச செயலாளர் ஆர்.ராஜாங்கம், கடலூர் மாவட்டச் செயலாளர் மாதவன், மாநிலக்குழு உறுப்பினர் ரமேஷ்பாபு, புதுச்சேரி செயற்குழு உறுப்பினர்கள் ராமச்சந்திரன், தமிழ்ச் செல்வன், சீனிவாசன், கொளஞ்சியப்பன், பிரபுராஜ், கலியமூர்த்தி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் சலீம், விசிக முதன்மைச் செயலாளர் தேவ.பொழிலன் ஆகியோரும் அஞ்சலி செலுத்தினர். புதுச்சேரி அரசு ஊழியர் சம்மே ளனத் தலைவர் ரவிச்சந்திரன், பொதுச்செயலாளர் ராதா கிருஷ்ணன், நிர்வாகிகள் கீதா, பிரேமதாசன், கிறிஸ்தோபர், தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் முன்னாள் மாநில செயலாளர் புருஷோத்தமன், ஓய்வூதியர் சங்க மாநிலச் செயலாளர் மனோகர் உட்பட இணைப்பு சங்கங்களின் நிர்வாகிகள் பலரும் அஞ்சலி செலுத்தினர்.
இறுதி ஊர்வலம்
தோழர் பாலமோகனனின் உடல் திங்களன்று(மே9) மாலை 4 மணிக்கு அரசு ஊழியர் சங்க அலுவலகத்திலிருந்து ஊர்வலமாக எடுத்து செல்லப்பட்டு கருவடிக் குப்பம் இடுகாட்டில் அடக்கம் செய்யப்பட்டது. இறுதி நிகழ்ச்சியில் ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டனர்.