குடியிருப்புகள் அருகே மதுபான நடன விடுதி அமைப்பதைக் கண்டித்து புதுச்சேரி முத்தியால்பேட்டை ஏழை மாரியம்மன் கோவில் அருகே மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் நகர கமிட்டி செயலாளர் மதிவாணன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் மாநில செயலாளர் ஆர்.ராஜாங்கம், மூத்த தலைவர் தா.முருகன், செயற்குழு உறுப்பினர்கள் மச்சந்திரன், சீனுவாசன், பிரபுராஜ், உழவர்கரை நகர கமிட்டி செயலாளர் ராம்ஜி, மாநிலக்குழு உறுப்பினர்கள் சரவணன், இளவரசி, ஆனந்து, சஞ்சய் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.