states

img

ஆசிரியர் சங்கத்தின் சார்பில் இன்றைய கல்வி நிலை குறித்து சிறப்பு கருத்துரங்கம்

புதுச்சேரி ஆசிரியர் சங்கத்தின் சார்பில் இன்றைய கல்வி நிலை குறித்து சிறப்பு கருத்துரங்கம் நடைபெற்றது. சங்க செயலாளர் சுவாமிராஜ் தர்மக்கண் தலைமை வகித்தார். கல்வியாளர் பிரின்ஸ் கஜேந்திரபாபு கலந்துகொண்டு கருத்துரை வழங்கினார். அரசு ஊழியர் சங்கங்களின் சம்மேளனத் தலைவர் ரவிச்சந்திரன், ஆலோசகர் பிரேமதாசன், ஆசிரியர் சங்கத் கவுரவத் தலைவர் சண்முகம், தலைவர் செங்கதிர் உள்ளிட்ட பலர் உரையாற்றினர். முன்னதாக, அரசு ஊழியர் சங்கங்களின் கவுரவ தலைவர் சி.எச். பாலமோகனின் நினைவேந்தல் நிகழ்ச்சியும் நடைபெற்றது.