states

img

பீகார்: ராணுவ பயிற்சி விமானம் விழுந்து விபத்து  

பீகாரில் ராணுவ பயிற்சி விமானம் கீழே விழுந்து விபத்துக்குள்ளானது.  

பீகார் மாநிலம் கயாவில் இந்திய ராணுவ பயிற்சி அகாடமி அமைந்துள்ளது. இன்று அகாடமியின் 2 விமானிகள் ராணுவ விமானத்தை இயக்கி பயிற்சி மேற்கொண்டுள்ளனர். பயிற்சி விமானம் புறப்பட்ட சிறிது நேரத்தில் திடீரென கீழே விழுந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 2 விமானிகளும் பாதுகாப்பாக மீட்கப்பட்டதாக ராணுவ மைய அதிகாரிகள் தெரிவித்தனர்.  

இந்த விபத்து குறித்து கயா சர்வதேச விமான நிலையத்தின் இயக்குநர் பங்கஜீத் சாஹா கூறுகையில், பயிற்சியில் ஈடுபடுவதாக விமானத்தை இயக்கியதும், சிறிது நேரத்திலேயே கட்டுப்பாட்டை இழந்ததால் கீழே விழுந்தது. விமானத்தை ஓட்டிச்சென்ற 2 விமானிகளும் அருகில் இருந்த கிராம மக்கள் காப்பாற்றினார்கள் என்றார்.  அதனைதொடர்ந்து கீழே விழுந்து நொறுங்கிய விமானத்தின் சில பாகங்களை கைப்பற்றிய பின் விபத்திற்கான காரணம் குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.