states

img

மிதக்கும் பீகார் வடக்கு மாவட்டங்கள் நிவாரணப் பொருட்களை வழங்க சென்ற விமானம் வெள்ளத்தில் மூழ்கியது

பாட்னா நேபாளம் மற்றும் இமயமலைச் சார லில் இடைவிடா மல் கனமழை வெளுத்து வாங்கி வரும் நிலையில், அப்பகுதிகளில் வெளியே றும் வெள்ள நீர் பீகார் மாநி லத்தின் வடக்கு மாவட்ட ங்களில் உள்ள ஆறுகளில் பெருக்கெடுத்து ஓடி வரு கிறது. கோசி மற்றும் கந்தக் தடுப்பணைகளில் இருந்து அதிக அளவு தண்ணீர் திறக்கப்பட்டுள்ள நிலை யில், பெல்சான்ட் வட்டாரத் தில் உள்ள மந்தர் அணை யில் உடைப்பு ஏற்பட்ட தைத் தொடர்ந்து சீதாமாரி யின் பல பகுதிகளும் வெள் ளத்தால் பாதிக்கப்பட்டுள் ளன. அதே போல முசா பர்பூரில் உள்ள கத்ரா  பகுச்சி துணை மின்நிலை யத்தில் வெள்ளம் புகுந்த தால் ஏற்பட்ட பாதிப்பின் காரணமாக அங்கிருந்து மின்சாரம் பெறும் பல ஆயிரக்கணக்கான வீடு கள் இருளில் மூழ்கியுள் ளன. இவ்வாறு கனமழை யால் பீகார் மாநிலத்தின் வடக்குப் பகுதி தற்காலிக தீவுகளாக மாறியுள்ளன. பல லட்சம் இயல்புநிலை யை இழந்துள்ளன.

இந்நிலையில், பீகா ரில் வெள்ள நிவாரணப் பொருட்களை ஏற்றிச் சென்ற ஹெலிகாப்டர் முசாபர்பூர் பகுதி யில் விழுந்து விபத்துக்குள் ளானது. ராணுவத்துக்கு சொந்தமான இந்த ஹெலி காப்டர், முசாபர்பூர் பகுதி யில் வெள்ளத்தில் சிக்கி யோருக்கு உணவுப் பொட் டலங்களை விநியோ கித்துக் கொண்டிருந்த போது ஹெலிகாப்டர் வெள்ள நீருக்குள் கீழே இறங்கியது. ஹெலி காப்டரில் இருந்த விமானிகள் 2 பேர் பாது காப்பாக இருப்பதாக தகவல் வெளியாகியுள்ள நிலையில், ஹெலிகாப்டர் வெள்ளத்தில் சிக்கிய நிலையிலும் அதில் இருந்த பொருட்களை மக்கள் படகு மூலம் அள்ளிச் சென்றனர்.