states

img

பஞ்சாபில் அமரீந்தர்சிங்கும் கைவிட்டார் பாஜக ஏமாற்றம்

புதுதில்லி, மே 26- பஞ்சாபில் பாஜக பிரச்சார நிகழ்ச்சிகளில் முன்னாள் முதல்வர் கேப்டன் அமரீந்தர் சிங் கலந்து கொள்ளாதது பாஜகவுக்கு பின்னடை வை ஏற்படுத்தியுள்ளது. அமரீந்தரின் முக்கியக் களமான பாட்டியாலாவில் மே 23 வியாழக்கிழமை நடைபெற்ற பிரதமரின் பேரணியிலும் அவர் கலந்து கொள்ளவில்லை. பாஜக வேட்பா ளராக அமரீந்தரின் மனைவி பிரனீத்  கவுர் போட்டியிடுகிறார். பிரச்சா ரத்திற்காக பிரதமர் கலந்து கொண்ட  பேரணியில் கூட அமரீந்தர் கலந்து  கொள்ளாததால் பாஜக தலைமை ஏமா ற்றமும் கவலையும் அடைந்துள்ளது.

உடல்நலக்குறைவு காரணமாக அமரீந்தர் பங்கேற்கவில்லை என அமரீந்தருடன் தொடர்புடைய வட்டா ரங்கள் கூறுகின்றன. ஆனால் பாஜக மாநிலத் தலைவர்கள் கூட இந்த விளக்கத்தை ஜீரணிக்கவில்லை. அமரீந்தர் மற்றும் அவரது மனைவி பிரனீத்கவுர் ஆகியோர் காங்கிரசில் இருந்து விலகி பாஜகவில் இணைந்த வர்கள்.  பஞ்சாபில் பாஜக கடும் சவாலை எதிர்கொள்கிறது. விவசாயிகள் போராட்டத்தால் பாஜக வேட்பாளர்கள் பல இடங்களில் வாக்கு கேட்கக் கூட முடியாமல் தவித்து வருகின்றனர்.

வேட்பாளர்களை தடுத்து நிறுத்தி பிரச்சாரத்தை நிறுத்துவது வழக்கமாகி விட்டது. இந்நிலையில், அமரீந்தர் சிங்  நேரடியாகப் பிரச்சாரம் செய்திருந்  தால், பொதுமக்களின் கோபத்தை சிறித ளவாவது கட்டுப்படுத்தியிருக்கலாம் என பஞ்சாப் பாஜக தலைவர்கள் கூறு கின்றனர். சமூக வலைத்தளங்களில் கூட பாஜகவுக்கோ, பிரதமருக்கோ ஆதர வான பதிவுகள் வருவதில்லை. சிரோ மணி அகாலிதளம் பஞ்சாபில் பாஜக வுடனான கூட்டணியை முன்னதாகவே முறித்துக் கொண்டது. இந்நிலையில், மாநிலத்தில் உள்ள 13 மக்களவைத் தொகுதிகளிலும் பாஜக தனித்துப் போட்டியிடுகிறது. முக்கியமான தேர்த லில் அமரீந்தர் சிங் தோல்வியடைந்த தால் பாஜக வரலாறு காணாத நெருக்க டியை எதிர்கொள்கிறது. பஞ்சாபிலி ருந்து எதையும் எதிர்பார்க்கக் கூடாது  என்பதுதான் பாஜக தேசியத் தலைமை யின் கணிப்பாகவும் உள்ளது.

;